கங்குலியின் பெயரை விட்ட சர்ச்சை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக 1980ம் ஆண்டுகளில் விளையாடியவர். அவருக்கு பின் வந்தவர் சவுரவ் கங்குலி ரவிசாஸ்திரி தொட்ட உயரத்தை விட சௌரவ் கங்குலி தொட்ட உயரம் மிகப்பெரியது. அவர்தான் இந்திய அணியை ஆக்ரோஷமாக வழிநடத்தி 2001 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். மேலும், பல போட்டிகளில் எப்படி வெற்றி பெறுவது என்று இந்திய அணியினருக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு கேப்டனாகவும் ஒரு அணியின் தலைவராகவும் பல இளம் வீரர்களை உருவாக்கினார்.

அதற்கு முன்னதாக விளையாடிய ரவிசாஸ்திரி பெரிதாக ஏதும் பாத்தது கிடையாது. ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரை வென்று கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் நேரடியாக பயிற்சியாளராகவும், ரவி சாஸ்திரி வர்ணனையாளர் பட்டியலிலும் பல ஆண்டு காலம் இருந்தார். தற்போதுதான் விராட் கோலியின் தயவில் ஒரு பயிற்சியாளராக இந்திய அணியில் இருந்துக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் தன்னைவிட இளம் வயது வீரர் சௌரவ் கங்குலி பிசிசிஐயின் தலைவராக மாறியது ரவி சாஸ்திரிக்கு மறைமுகமாக பிடிக்கவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது சவுரவ் கங்குலியை மறைமுகமாக சீண்டி விடுவது ரவி சாஸ்திரிக்கு வழக்கமாகவே இருந்தது. இந்நிலையில் நேற்றைய ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ரவிசாஸ்திரி ஐபிஎல் தொடர் நடந்ததற்காக அனைவரையும் பாராட்டினார். குறிப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதற்காக உழைத்தவர்கள் பாராட்டுகிறார்.
Take a BOW @JayShah, Brijesh Patel, @hemangamin and the medical staff of the @BCCI for pulling off the impossible and making it a Dream @IPL #IPL2020 #IPLfinal pic.twitter.com/5rL6oqOLmC
— Ravi Shastri (@RaviShastriOfc) November 10, 2020
அப்படி பாராட்டியதால் அதன் தலைவர் சவுரவ் கங்குலியை பாராட்டி இருக்க வேண்டும். அவர் தான் முதன்மையான ஆளாக இருந்து மொத்த வேலையையும் நடத்தியவர். ஆனால் ரவி சாஸ்திரி பாராட்டியது பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷாவையும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படெலையும் பாராட்டி இருக்கிறார். கங்குலியின் பெயரைக் கூட ட்விட்டர் பக்கத்தில் மென்சன் செய்யவில்லை ரவிசாஸ்திரி இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ஏன் இப்படி என்று கரித்து கொட்டி வருகிறார்கள்