இவரை போன்ற ஒருவர் இல்லாததால் தான் இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை... மவுனம் கலைத்த ரவி சாஸ்திரி !! 1

2019 மற்றும் 2021 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் என்னவென்பதை ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு அணில் கும்ப்ளேவிற்கு பதில் இந்திய அணியின் தலைமை பயிர்ச்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரி இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றக் கூட்டி சென்றார் என்றே கூறலாம்.இவரை போன்ற ஒருவர் இல்லாததால் தான் இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை... மவுனம் கலைத்த ரவி சாஸ்திரி !! 2

ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழும், விராட் கோலியின் தலைமையின் கீழும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி டெஸ்ட் தொடரில் அசைக்க முடியாத ஒரு அணியாக வலம் வந்தது.

இவருடைய பயிற்சியின் கீழ் இந்திய அணி வெளிநாட்டு தொடரில் நடைபெறும் டெஸ்ட் தொடரிலும் வெற்றி பெற்று பல்வேறு விதமான சாதனைகளை படைத்தது.

என்னதான் இந்திய அணி பல தொடர்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தாலும் மிக முக்கிய தொடரான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியால் பெரிதளவு செயல்பட முடியவில்லை.இதனால் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.இவரை போன்ற ஒருவர் இல்லாததால் தான் இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை... மவுனம் கலைத்த ரவி சாஸ்திரி !! 3

இந்த அவப்பெயரினால் இந்திய அணியின் தலைமை பேச்சாளர் ரவி சாஸ்திரி தன்னுடைய பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அதேபோன்று இந்திய அணிக்கு தன்னால் உலக கோப்பையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்ற விரக்தியில் விராட் கோலி தன்னுடைய கேப்டன் பதவியை உதறி தள்ளிவிட்டு முழு நேர பேட்ஸ்மனாக விளையாடி வருகிறார்.

இதனிடையில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது ஒருநாள் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்ட ரவி சாஸ்திரி, தன்னுடைய பயிற்சியின் கீழ் இந்திய அணியால் உலக கோப்பை தொடரை வெல்ல முடியாததற்கு ஆள்ரவுண்டர் பற்றாக்குறை தான் காரணம் என்று விரிவாக பேசியிருந்தார்.

இவரை போன்ற ஒருவர் இல்லாததால் தான் இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை... மவுனம் கலைத்த ரவி சாஸ்திரி !! 4

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசுகையில்,“என்னை பொறுத்தவரையில் டாப் சிக்ஸில் சிறப்பாக பந்து வீசக்கூடிய ஒரு ஆல்ரவுண்டர் இருக்க வேண்டும், அந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா காயத்தினால் சரியாக விளையாட முடியாமல் போனதுதான் இந்திய அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம், இந்த ஒரு விஷயம் தான் இந்திய அணி இரண்டு முறை உலக கோப்பை தொடரை வெல்ல முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, ஏனென்றால் அவரை தவிர்த்து டாப் சிக்ஸில் பந்து வீசக்கூடிய ஒரு ஆல்ரவுண்டர் இல்லை, அதுதான் இந்திய அணிக்கு மிகப்பெரிய அடியே.. இதனால் நாங்கள் தேர்வாளர்களிடம் அவருக்கு பதில் வேறு ஒருவரை தேர்ந்தெடுங்கள் என்று கூறினோம்., ஆனால் அவருக்கு பதில் அந்த சமயத்தில் யாருமே இல்லை ” என்று ரவி சாஸ்திரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *