கோடி கோடியாய் குவிக்க காத்திருக்கும் ரவி சாஸ்திரி..? அடித்தது ஜாக்பாட் !! 1

கோடி கோடியாய் குவிக்க காத்திருக்கும் ரவி சாஸ்திரி..? அடித்தது ஜாக்பாட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் சம்பளம் பல மடங்காக உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரை தவிர மற்ற அனைவருமே அதே பதவியில் நீட்டிக்கப்பட்டனர். இந்திய அணியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் மீண்டும் நியமிக்கப்பட்டனர். பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கார் மட்டும் கழட்டிவிடப்பட்டு விக்ரம் ரத்தோர் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

கோடி கோடியாய் குவிக்க காத்திருக்கும் ரவி சாஸ்திரி..? அடித்தது ஜாக்பாட் !! 2

இந்நிலையில், மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரிக்கு சம்பள உயர்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடந்த முறை ரூ.8 கோடிக்கு ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், மீண்டும் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள சாஸ்திரிக்கு 20% வரை ஊதிய உயர்வு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எனவே அவரது ஊதியம் ரூ.8 கோடியிலிருந்து ரூ.9.5கோடி-ரூ.10 கோடியாக உயர வாய்ப்புள்ளது.

கோடி கோடியாய் குவிக்க காத்திருக்கும் ரவி சாஸ்திரி..? அடித்தது ஜாக்பாட் !! 3

அதேபோல பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் தொடரும் பரத் அருண் மற்றும் ஸ்ரீதருக்கு ரூ.3.5 கோடி வரை ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *