தோனியைப் பற்றி பேசினால் ‘ஷோ’ நன்றாகத்தான் ஓடும் : ரவி சாஸ்திரி

சமீப காலமாக தோனி மீதான் விமர்சனங்கள் முன்னாள் வீரர்களிடம் இருந்து அதிகமாகவே வந்துகொண்டிருக்கின்றன. தற்போது தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஷ்திரி பேசியுள்ளார். மேலும், அப்படி தோனியை குறைவாக மதிப்பிட்டு பேசுபவர்கள் ஏதாவது பேச வேண்டும் என பேசுவதாக அவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் முடிந்த் இந்தியா-நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியின் இந்திய அணி தோற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 20 ஒவர்களுக்கு 197 ரன் அடிக்க வேண்டி இருந்தது.

இதனை சேஸ் செய்த இந்திய அணி 10 ஓவர்களுக்கு 67 ரன் மட்டுமே எடுத்து 4 விக்கெட் இழந்து திணறி வந்தது. அப்போது களம் இறங்கிய தோனி, முதலில் ஓவருக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில் மிகவும் மெதுவாக ஆட்டத்தை துவங்கினார்.

அதே போல், முதல் 20 பந்துகளுக்கு வெறும் 17 ரன் மட்டுமே எடுத்திருந்த தோனி, இறுதியில் கோலி தனது விக்கெட்டை இழந்தவுடன் சற்று அடித்து ஆடினார், 37 பந்துகளுக்கு 49 ரன் அடித்து தோனிடும் தனது விக்கெட்டை இழந்து விட இந்திய அணி 40 ரன் விதயாசத்தில் தோல்வியடைந்தது.

இதனால், தோனியை பல முன்னாள் வீரர்கள் தோனியை விமர்சிக்க துவங்கிவிட்டனர்.

முக்கியமாக தோனி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பது அனைத்து விமர்சகர்களும் கூறுவதாக இருந்தது. அகர்கர், கங்குலி, நெஹ்ரா, வீ.வீ.எஸ் லட்சுமனன் என அனைவரும் இதே துதியைத் தான் பாடினர்.

ஒரு வினை இருந்தால் அதற்கு எதிர்வினை இருப்பது உலக நியதி தானே, பலர் விமர்சித்தாலும், அணியின் கேப்டன் கோலி, முன்னாள் வீரர் கங்குலி என பலரும் தோனிக்கு ஆதரவாக் பேசினர்.  உட்சமாக கேப்டன் கோலி, அவரைப் பற்றி இப்படி பேசுவது சரியாக இருக்கது என கண்டித்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

தற்போது அந்த பட்டியலில், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் சேர்ந்துள்ளார். தோனிக்கு ஆதரவு அளித்து அவர் பேசியதாவது,

தோனியை விமர்சிப்பவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என எனக்குத் தெரியும். அது போன்ற கேள்விகளை அவர்களே கேட்பார்கள், வேறு வழியில்லாமல் நாம் பதில் சொலி தான் ஆக வேண்டும். ஷோ நடக்கவேண்டும் என்றால் என்ன வேண்டுமானால் பேசுவார்கள்.

தோனி ஒரு சூப்பர் ஸ்டார். இந்திய கிரிக்கெட் வரலாற்றி மிகச்சிறந்த் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் அவர். ஆகவே, அவரைப் பற்றி பேசினால் ஒரு நல்ல செய்தியாகத் தான் இருக்கும். இப்படி ஒரு லெஜன்ட் வீரரை பற்றி பேசினால் டீவியில் ஒரு பெரிய செய்தியாகத் தான் இருக்கும் என பேசுகிறார்கள்.

எனக் கூறினார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

 

Editor:

This website uses cookies.