இந்திய விளையாட்டு விருதுகள் 2017: முக்கிய விருதை வென்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் அளவில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், விராட் கோலி அறக்கட்டளை சார்பில் இந்திய விளையாட்டு விருதுகளின்முதல் பதிப்பில் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின். கபடி வீரர் பிரதீப் நர்வால், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ருபிந்தர் பால் சிங், ஏன் செதேஸ்வர் புஜாரா மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோரை தொடர்கடித்து இந்த பட்டத்தை வென்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்த விருது வழங்கும் விழாவை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிசினெஸ் ஜாம்பவான் சஞ்சீவ் கோயங்கா ஆகியோர் சேர்ந்து இதை வெளியிட்டார்கள். இந்த விருது வாங்கும் போட்டியில் இருந்து தானே விலகிக்கொண்டார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி.

இந்த அவார்டின் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் பதக்கங்களை வாங்கி கொண்டே இருக்கிறார். கடந்த வருடம் வருடத்தின் சிறந்த ஐசிசி கிரிக்கெட்டர் மற்றும் 2016ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருதை வாங்கினார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின். ஒரு வருடத்தில் வருடத்தின் சிறந்த ஐசிசி கிரிக்கெட்டர் மற்றும் 2016ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் வாங்கிய இரண்டாவது இந்திய வீரர் இவர் தான், இதற்கு முன்பு ராகுல் டிராவிட் ஒரே வருடத்தில் இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளார். அதே போல், வருடத்தின் சிறந்த வீரர் என்ற விருதை பெற்ற மூன்றாவது வீரர் இவர் தான், இதற்கு முன்பு ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இந்த விருதை வாங்கியுள்ளார்கள்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இரண்டு முறை திலிப் சர்தேசை விருது வென்ற ஒரே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இரண்டு சதம் அடித்தது மட்டும் அல்லாமல் 17 விக்கெட்டையும் எடுத்து சிறப்பாக செயல் பட்டதால் அஸ்வினுக்கு இந்த விருதை அளித்தார்கள்.

மேலும், சிறந்த வீராங்கனை என்ற விருதை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் தட்டி சென்றார். அது மட்டும் இல்லாமல், வருடத்தின் சிறந்த அணி என்ற விருதை இந்திய அணியின் தரப்பில் மித்தாலி ராஜ் பெற்றார். மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் நடந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டி வரை சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.