அஸ்வினால் 600 விக்கெட் வீழ்த்த முடியுமா? – சௌரவ் கங்குலி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 4 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.

டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி உலக சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின் நிருபர்களிடம் கூறியதாவது:-

Ashwin bounced back in style in Nagpur by taking four wickets in each innings, as India decimated the Islanders by an innings and 239 runs to go one nil up in the three-match series.

300 விக்கெட்டுகளை இரண்டு மடங்காக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 600 விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எனது இலக்காகும். இதுவரை 54 டெஸ்டுகளில் விளையாடி உள்ளேன்.

சுழற்பந்து வீச்சு எளிதானது அல்ல. தற்போது வீரநடைபோல் எழுந்து இருப்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அதற்கு பின்னால் நிறைய இருக்கிறது. நானும், ஜடேஜாவும் அதிகமான ஓவர்கள் வீசினோம். இதனால் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு உதவியாக இருந்தது.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

இது குறித்து முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி அஸ்வினை பாரட்டி புகழ்ந்துள்ளார். மேலும், அவர் எப்படி 500 முதல் 660 விக்கெடுகள் வீழ்த்தலாம் எனவும் கூறியுள்ளார்.

50+ டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் எடுப்பது  ஒரு அசாத்தியமான சாதனையாகும். வெறும் 54 டெஸ்ட் போட்டிகளில் இவர் இந்த சாதனயை படைத்துள்ளது அற்புதமானது. இப்படியே இன்னும் 50 டெஸ்ட் ஆடி மொத்தம் 100ஆகும் போது அவர் நினைத்த 500 – 600 விக்கெட்டுகள் வீழ்த்தலாம்.

மேலும், அஸ்வின் மற்ற சுழற்ப்பந்து வீச்சாள்களிடம் இருந்து எப்படி வேறுபட்ட ஒரு தரமான சுழற்ப்பந்து வீச்சாளராக இருக்கிறார் எனவும் கூறினார்.

ஒரே மைதானத்தில் வெவ்வேறு தரமான பந்து வீச்சாளர்களை நாம் பார்க்கலாம். அதே போட்டியில் தன ரங்கனா ஹெராத் மற்றும் தில்ருவன் பெரேராவும் பந்து வீசினார்கள். அங்கு தான் அஸ்வினும் பந்து வீசினார். ஆனால், அவர் மட்டும் வித்யாசமான வீரராக காட்சியளித்தார். அவருடைய சரியான அணுகுனுறை அவரை வித்யாசமாக காட்டுகிறது. இன்னும் பல சாதனைகள் படைக்க அவருக்கு வாழ்த்துக்கள்.

எனக் கூறினார் கங்குலி.

Editor:

This website uses cookies.