ஹேடினுக்கு செருப்படி கொடுத்த அஸ்வின்

இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் என்றாலே, மற்ற வீரர்களை கிண்டல் செய்வது, சண்டை போடுவது என போட்டியே விறுவிறுப்பாக இருக்கும். இந்த நூற்றாண்டின் சிறந்த அணியாக ஆஸ்திரேலியா அணி முன்னேறிக்கொண்டிருக்கும் போது, சவுரவ் கங்குலியின் தலைமையில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் என்றாலே கெத்து தான் என்று 2001 தொடரில் தான் தொடங்கியது. இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் என்றாலே, மற்ற வீரர்களை கிண்டல் செய்வது, சண்டை போடுவது என போட்டியே விறுவிறுப்பாக இருக்கும்.

2014-இல் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பேட்டிங் விளையாட வந்த போது நடந்த சம்பவத்தை கூறினார்.

என்ன நடந்தது?

நான்காவது நாள் காலையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் விளையாட வந்த போது, ஆஸ்திரேலியா வீரர் பிராட் ஹேடின் அவரை செட்டில் ஆக விடாமல் இருக்க முயற்சித்தார்.

“நான்காவது நாள் காலையில் நான் பேட்டிங் விளையாடினேன். நாதன் லியோன் பந்துவீச்சை அடித்து ஆடாமல், சிங்கிள்ஸ் தட்டி விளையாடினேன். மக்கள்கள் கத்தினார்கள், ஆனால் நான் அடித்து விளையாடவில்லை. விக்கெட்-கீப்பராக ஹேடின் இருந்தார். ஒரு மணி நேரம் 30 நிமிடமாக அவர் நின்றுகொண்டிருந்தார்,” என அஸ்வின் கூறினார்.

“அவர் ஒரே குறிக்கோளில் இருந்தார், பேசிக்கொண்டே தான் இருந்தார், அக்ஷனே இல்லை. பயனற்ற வீரர் போல் பேசி கொண்டே இருந்தார். ஒரு மணி நேரம் 30 நிமிடமாக பேசி கொண்டே இருந்தார். நானும் கேட்டேன், கேட்டேன், கேட்டேன். இதனால், ‘ஹே, ஹே, உனக்கு வாய் இல்லையா? நீ பேச மாட்டியா? செய்தியாளர்களிடம் மட்டும் தான் பேசுவியா? என ஹேடின் என்னிடம் கேட்டார்,” என அஸ்வின் கூறினார்.

சுருக்குனு பதில் அளித்த அஸ்வின்:

“நீ செய்தியாளர்களிடமே நேரத்தை செலவழித்து கொண்டிருந்தால், பயிற்சி எடுக்க முடியாமல் உன்னை போல் மட்டமான டெஸ்ட் கிரிக்கெட்டராக தான் ஆக வேண்டும்,” என அஸ்வின் பதிலளித்தார்.

“என்னது? இங்க பாரு! என ஹேடின் கொதித்தார். இதற்கு, உன்னோட சராசரியை பாரு. இந்த தொடரில் எல்லாரும் சிறப்பாக விளையாடுகிறார்கள். மிட்சல் ஜான்சன் கூட ரன் அடிக்கிறார். ஆனால், நீ ரன் அடிக்கவில்லை,” என அஸ்வின் பதிலளித்தார்.

இதன் பிறகு டேவிட் வார்னர் நடுவில் நுழைந்தார்.

“ஹே, இங்க பாரு என டேவிட் வார்னர் கூற, கவனி, நீ சொல்வதை எல்லாம் என்னால் கேட்க முடியாது என அஸ்வின் கூறினார். இதற்கு பிறகு, நீ உங்க ஊர்ல தான் ஒழுங்கா விளையாடுவ, இங்க பப்பு வேவாது என டேவிட் வார்னர் கூறினார். ‘நான் அங்கேயாவது விளையாடுறேன், நீங்கள் ஆஸ்திரேலியாவிலேயே ரன் அடிக்காமல் அவுட் ஆகறீங்க’, என்கிட்ட வசிக்காத இன்னொரு இன்னிங்ஸ் வேற இருக்கு, என்கிட்ட அவுட் ஆகி அசிங்க படாத என கூறினார். அதே போல் என்னிடம் வார்னர் அவுட் ஆனார்,” என அஸ்வின் பதிலளித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.