இந்திய அணியில் இவர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் என உண்மையை போட்டு உடைத்துள்ளார் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் குறித்த சர்ச்சை நிலவிவருகிறது கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். அதன் பிறகு விருத்திமான் சஹா தொடர்ந்து அணியில் இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக அணியிலிருந்து விலகினார். இதனால் இளம் வீரர் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் சதமடித்து அசத்தியதால் இவரின் இடம் உறுதியானது.
18 மாத இடைவெளிக்குப் பிறகு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம் பெற்ற சஹாவிற்கு ஆடும் 11 வீரர்களில் இடம் அளிக்கப்படவில்லை. பண்ட் க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்து, பண்ட் சோதப்பியதால், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சஹா மீண்டும் ஆட வைக்கப்பட்டார்.
இதனை பயன்படுத்திக்கொண்டு, விசாகப்பட்டினம் மைதானத்தில் அசத்தலான கீப்பிங் மற்றும் கேட்ச்கள் செய்து ஆச்சர்யப்படுத்தினார். நடைபெற்று வரும் புனே டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்சில் அபாரமாக கீப்பிங் செய்து அசத்தினார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக சாஹாவின் கீப்பிங் குறித்து கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பேசியதை நாம் கண்டிருப்போம். அதேபோல் தற்போது சுழல்பந்து வீச்சாளர் அஷ்வின் டெஸ்ட் அணியில் சிறந்த விக்கெட் கீப்பர் சஹா என புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், சஹா கோட்டை விடுவதை பார்ப்பதே அரிது. மிகவும் சிறந்த கீப்பர் என சற்றும் சிந்திக்காமல் சொல்லிவிடலாம். தென் ஆப்ரிக்க தொடரில் கண் கூட கண்டிருப்போம். கீப்பிங் மட்டுமல்ல பேட்டிங்கிலும் மிகவும் சிறப்பான வீரர் சஹா என்றார்.