ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் அஷ்வின் குறித்து தற்பொழுது பேசியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் இன்னும் பல ஆண்டுகாலம் விளையாட போகிறார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அசத்தி வரும் அஸ்வின்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவில் சென்ற ஆண்டு இறுதியில் நடந்த தொடரிலும் இந்த ஆண்டு இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த தொடரிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மிக சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 400 ஆவது விக்கெட்டை கைப்பற்றி,டெஸ்ட் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் மத்தியில் 4-வது வீரராக 400 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொஞ்சம்கூட சுயநலமில்லாத ஒரு வீரர்
மேலும் ரவிச்சந்திரன் அஷ்வின் குறித்து பேசிய பிராட் ஹாக், தற்பொழுது அவருக்கு வயது 34. இப்பொழுது அவர் 400 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார். நிச்சயமாக இன்னும் எட்டு ஆண்டுகள் அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட அப்படி விளையாடும் பட்சத்தில், 600 டெஸ்ட் விக்கெட்டுக்களை நிச்சயமாக அவர் இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
ஆனால் இன்னும் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயமாக 800 விக்கெட்டுகள் மேல் அவர் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே முத்தையா முரளிதரன் சாதனையை முறியடிக்க அவர் ஒருவரால் நிச்சயமாக முடியும் என்று பிராடு ஹாக் கூறியுள்ளார். மேலும் தற்பொழுது உள்ள இந்திய வீரர்களில் சுயநலம் இல்லாத வீரர்களில் அவரும் ஒருவர் என்றும் அஸ்வினை புகழ்ந்துள்ளார்.

இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வந்த அக்சர் பட்டேலை அவர் மிக அழகாக வழிநடத்தி அவருக்கு தகுந்த ஆலோசனையை வழங்கினார். இந்தப் பண்பு இன்னும் அவரை நிறைய சாதனைகளைப் புரிய வைக்கும் என்று இறுதியாக கூறி முடித்தார்.