இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எவ்வளவு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இடது கை பேட்ஸ்மேன்களை 200 ஒருமுறை அவர் செய்துள்ளார்.
மேலும் இதுவரை அவர் மொத்தமாக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 410 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவருடைய பௌலிங் ஆவெரேஜ் 24.68 மற்றும் எக்கானமி 2.81 ஆகும். 4 விக்கெட் ஹால் 19 முறையும், 5 விக்கெட் ஹால் 30 முறையும், 10 விக்கெட் ஹால் 7 முறையும் கைப்பற்ற இருக்கிறார்.
மேலும் இந்திய அணியில் கபில்தேவ், அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கை தொடர்ந்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 4-வது வீரராக அவர் தற்போது தன்னுடைய பெயரை தடம் பதித்திருக்கிறார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 68 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவராகவும் வரும் உலக அளவில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 3வது வீரராகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் அஸ்வின் தற்பொழுது இருக்கிறார்.
என்னுடைய விளையாட்டை நான் மேம்படுத்திக் கொள்ளாத நிலையில் நிச்சயமாக ஓய்வு பெறுவேன்
அண்மையில் பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், தன் மீது எழும் விமர்சனங்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்க போவதில்லை என்று கூறியுள்ளார். வீரர்களின் விளையாட்டை ஒவ்வொருவரும் குறை மற்றும் நிறை கூறுவது வழக்கமான விஷயம் என்றும், அதை எப்பொழுதும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர் நான் ஒரு சாதாரண மனிதன், மகிழ்ச்சியும் அமைதியும் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு மனிதன் என்றும் கூறியிருக்கிறார். வெற்றிகள் வரும் நிலையில் அதைக் கொண்டாட விரும்ப மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். தெளிவான திட்டத்தோடு மற்றும் பயிற்சியோடு அந்த வெற்றிகள் வந்ததாகவும், அந்த வெற்றியில் நீண்ட நேரம் அடங்கி விடாமல் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தன்னுடைய நோக்கம் என்றும் கூறியிருக்கிறார்.

எப்பொழுதும் ஒரே மாதிரியாக விளையாடுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது, நாளுக்கு நாள் என்னுடைய விளையாட்டை மேம்படுத்தவே நான் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் அதன்படி நான் எப்பொழுது என்னுடைய போட்டியை மேம்படுத்த தவறுகிறேனோ அப்பொழுது நான் ஓய்வு பெற்றுக் கொள்வேன் என்று அஸ்வின் கூறியிருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு லெஜன்ட் கிரிக்கெட் வீரர்
இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறியிருக்கிறார். எந்த ஒரு போட்டியிலும் தன்னுடைய முழு பங்களிப்பை எப்பொழுதும் வழங்கவேண்டும் என்கிற தாகம் அவருக்குள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு லெஜன்ட் கிரிக்கெட் வீரர் என்று ஜஸ்பிரித் பும்ரா கூறியிருக்கிறார்.
மேலும் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், ரவிச்சந்திரன் அஸ்வின் எப்பொழுதும் பயிற்சி எடுத்துக் கொண்டே இருப்பார் என்றும், தன்னை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற சிந்தனையில் எப்போதும் சுற்றித் திரிவார் என்றும் கூறியிருக்கிறார். மிகவும் கடினமாக உழைக்கும் ஒரு கிரிக்கெட் வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர் என்று அவர் கூறியிருக்கிறார்.