நான் கிரிக்கெட்டில் வளர இவர் மட்டுமே காரணம் - ரவி அஷ்வின் ஓபன் டாக்! அது தோனி, விராட்கோலி இல்லை! 1

நான் கிரிக்கெட்டில் வளர இவர் மட்டுமே காரணம் – ரவி அஷ்வின் ஓபன் டாக்! அது தோனி, விராட்கோலி இல்லை!

நான் கிரிக்கெட்டில் இந்த அளவிற்கு உயர்வதற்கு காரணமாக இருந்த நபர் இவர்தான் என சுட்டிக்காட்டியுள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஷ்வின் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி அவர் திறமையை வெளிப்படுத்தியதால், சர்வதேச இந்திய அணியில் இடம் கிடைத்தது.

நான் கிரிக்கெட்டில் வளர இவர் மட்டுமே காரணம் - ரவி அஷ்வின் ஓபன் டாக்! அது தோனி, விராட்கோலி இல்லை! 2

அதன்பிறகு, தனது மாயாஜால சூழலில் பலரது விக்கெட்டுகளை வீழ்த்தி தனக்கென தனியிடத்தை நிறுவிக் கொண்டார் அஸ்வின. கடந்த இரண்டு ஆண்டுகளாக லிமிட்டட் ஓவர் போட்டிகளில் இவரது தாக்கம் சற்று குறைவாகவே காணப்படுகிறது.

இருப்பினும் டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வரும் சுழல்பந்து வீச்சாளராக அஸ்வின் இருந்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார் அஸ்வின். இதுவரை 71 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். 116 ஒருநாள் போட்டிகளிலும் 46 டி20 போட்டிகளிலும் ஆடியிருக்கிறார்.

நான் கிரிக்கெட்டில் வளர இவர் மட்டுமே காரணம் - ரவி அஷ்வின் ஓபன் டாக்! அது தோனி, விராட்கோலி இல்லை! 3

குறிப்பாக டெஸ்ட் அரங்கில் மட்டுமே 365 விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். அதில் 27 முறை ஐந்து விக்கெட்டுகள், 17 முறை 4 விக்கெட்டுகளும் ஏழுமுறை 10 அடங்கும்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது பரவி வருவதால் மார்ச்சு மாதம் இறுதியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நடக்கவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டியிலும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களிடம் கிரிக்கெட் வீரர்கள் வீடியோ காணொளி மூலம் தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உடன் நடந்த பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்துகொண்டார்.

அப்போது உங்களின் இந்த வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ன மஞ்சுரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த அஸ்வின்,

Cricket, India A, Rahul Dravid, WV Raman

“WV ராமன் எனக்கு ஆஸ்தான குரு. அவர் ஒருவரின் காரணமாகவே நான் இத்தகைய வளர்ச்சியை அடைந்து இருக்கிறேன். எதையும் நேரடியாக பேசக்கூடிய நபராவார். பயிற்சியின்போது மிகவும் ஒழுக்கத்தை கடைபிடிக்க கூடியவர். பீல்டிங் மற்றும் பந்துவீச்சிலும் பல யுக்திகளை அவர் கற்றுக் கொடுத்ததால் தான் என்னால் இந்த அளவிற்கு சாதிக்க முடிந்திருக்கிறது.” என பதிலளித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *