6 மாசமா ஆடமா இருந்த ஜடேஜாவா? பட்டையகிளப்பி வரும் அக்ஸர் பட்டேலா? – யாருக்கு முதல் டெஸ்ட் பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கவேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

அக்சர் பட்டேல் மற்றும் ஜடேஜா இருவருமே ஒரே மாதிரியான வீரர்கள், இவர்களில் யாரை பிளேயிங் லெவனில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் ரவி சாஸ்திரி.

நாக்பூர் மைதானத்தில் வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி துவங்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பதற்கு இரு அணிகளும் கடந்த ஒரு வார காலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியா அணி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவிற்கு வந்து தங்களது பயிற்சிகளை துவங்கி விட்டனர். அதைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்துவிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி தங்களது பயிற்சிகளை துவங்கி விட்டனர்.

காயம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்த ரவீந்திர ஜடேஜா ரஞ்சிக்கோப்பை போட்டியை விளையாடி தனது உடல் தகுதியை நிரூபித்து மீண்டும் அணிக்குள் திரும்பியிருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜாவிற்கு மாற்று வீரராக உள்ளே வந்து கடந்த ஓர் ஆண்டாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தனக்கென்று இடத்தை உருவாக்கிக் கொண்ட அக்ஸர் பட்டேல் இந்த அணியில் இருக்கிறார்.

 

இருவருமே ஒரே மாதிரியான வீரர்கள் என்பதால் யாரை பிளேயிங் லெவனில் பயன்படுத்த வேண்டும்? ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது ஸ்பின்னர் ஆக இருக்கிறார். மூன்றாவது ஸ்பின்னராக யாரை உள்ளே கொண்டு வரவேண்டும்? என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ரவி சாஸ்திரி.

“ஸ்பின்னர்களை பொறுத்தவரை அக்ஸர் பட்டேல் மற்றும் ஜடேஜா இருவரும் ஒரே மாதிரியான வீரர்கள். இரண்டு பேரையும் அணியில் பயன்படுத்துவது சரியான திட்டமாக இருக்காது. ஒருவேளை இந்திய அணி டாஸ் இழந்துவிட்டால் பௌலிங் செய்ய நேரிடலாம். அப்போது முதல் நாளில் இருந்தே நன்றாக சுழற்சியுடன் ஸ்பின் பௌலிங் செய்யக்கூடிய ஒருவர் அணியில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வீரர் குல்தீப் யாதவ். அவரால் முதல் நாளில் இருந்தே நன்றாக சுழற்சியுடன் பந்துவீச முடியும். ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களுக்கு கூடுதல் பதட்டமும் இருக்கும்.

அக்ஸர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரில், அக்ஸர் பட்டேல் பிளேயிங் லெவனில் இருப்பது சரியானதாக தெரிகிறது. ஜடேஜா தற்போது தான் குணமடைந்து வந்திருக்கிறார். உடனடியாக அவரை ஐந்து நாட்கள் முழுவதும் பயன்படுத்தினால் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அது இன்னும் அவருக்கு பாதிப்பை கொடுக்கும் என்பதால் அக்ஸர் பட்டேல் முதல் டெஸ்டில் இருப்பது சரியானதாக இருக்கும். இரண்டாவது போட்டிக்கு யார் இருக்க வேண்டும் என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.