ஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா !! 1

ஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா

ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இன்றைய போட்டியின் மூலம் சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 24 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 26வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்க்ச்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களும், ஜாஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்தனர்.

அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்த ஜடேஜா, ஐ.பி.எல் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா !! 3

ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியல் இங்கே;

ரவீந்திர ஜடேஜா – 100 விக்கெட்டுகள்

பிரக்யான் ஓஜா – 89 விக்கெட்டுகள்

அக்‌ஷர் பட்டேல் – 64 விக்கெட்டுகள்

ஷாகிப் அல் ஹசன் – 58 விக்கெட்டுகள்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *