உலகின் தலைசிறந்த பீல்டர் இந்த இந்திய வீரர் தான்; ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனான ரவீந்திர ஜடேஜா, உலகின் தலைசிறந்த பீல்டர் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் தாக்கத்தில் பல மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள், அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தும், அவர்களுடன் கலந்துரையாடியும் தங்களது நேரத்தை கழித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், அந்த மிக முக்கிய வீரருமான ஸ்டீவ் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு ஓபனாக பதிலளித்தார். அதில் சிறந்த பீல்டர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா தான் சிறந்த பீல்டர் என ஓபனாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவரை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு,கேஎல் ராகுல் என பதில் அளித்தார் ஸ்டீவ் ஸ்மித். கே.எல் ராகுல் இந்திய அணிக்காக 346 டெஸ்ட், 32 ஒருநாள் போட்டிகள், 42 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியில் ரெகுலர் வீரராக இடம்பிடித்துள்ள ராகுல் தற்போது கூடுதலாக விக்கெட் கீப்பர் பொறுப்பை கவனித்து வருகிறார். இதேபோல மகேந்திர சிங் தோனி குறித்த கேள்விக்கு, ஜாம்பவான் என்றும் மிஸ்டர் கூல் என்றும் பதில் அளித்தார் ஸ்மித்.