அபராதம் விதிக்கப்பட்ட ஜடேஜா ;காரணம் என்ன தெரியுமா,வீடியோ உள்ளே!! 1

இந்திய அணியின் முன்னணி வீரர் ரவீந்திர ஜடேஜா,குஜராத்தில் உள்ள நேஷனல் பூங்காவில் சுற்றிப் பார்க்கச் சென்ற பொழுது அங்கு இருந்த சிங்கத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் அந்த போட்டியில் பங்கு பெற முடியவில்லை, அதிலிருந்து விலகிய இவர் அடுத்து எந்த போட்டியிலும் பங்கு பெறவில்லை.

அபராதம் விதிக்கப்பட்ட ஜடேஜா ;காரணம் என்ன தெரியுமா,வீடியோ உள்ளே!! 2

இன்னிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இவருடைய பெயர் இடம்பெறவில்லை இதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான லிமிடெட் ஓவர் போட்டிகளில் இவர் இந்திய அணிக்காக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 5 டி-20 போட்டி அகமதாபாத்தில் மார்ச் 12 தொடங்கவுள்ளது,அதற்க்கு முன் ஜடெஜா காயத்தில் இருந்து குனமடைந்துவிட்டால் அது இந்திய அணிக்கு பலமாக அமையும்.

இந்நிலையில் கீர் நேஷனல் பூங்காவுக்கு சுற்றிப் பார்க்க சென்ற ரவீந்திர ஜடேஜா மற்றும் அவருடைய மனைவி, அங்கிருந்த சிங்கங்களை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது அங்கிருந்த விதிமுறைகளை மீறுவதாகும். இதற்காக இவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் 2016இல் இதே போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டது அப்பொழுதும் இதேபோன்று சிங்கத்துடன் எடுத்த போட்டோவை சமூக வளைதலங்களில்பதிவிட்டார்.அதற்க்காக இவருக்கு 20,000 அபராதமாக விதிக்கப்பட்டது அதேபோன்று குஜராத்தில் உள்ள கிர் நேஷனல் பூங்காவில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கும் இவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது,

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *