தற்போது இந்திய அணியில் இடம் இல்லாமல் பல்வேரு காரணங்ல் காட்டி கலட்டி விடப்பட்டிருக்கும் வீரர்களில் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவும் ஒருவர். சமீபத்தில் நடந்த இலங்கை உடனான் 3 போட்டிகளில் அபாராமாக விளையாடி இருந்தாலும் யோ-யோ உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் தான் இவருக்கும் அணியில் இடம் என்பதை பி.சி.சி.ஐ சொல்லாமல் சொல்லி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் 5 ஓரு நாள் தொடரில் முதல் மூன்ரு சந்தர்பத்தினால் தேர்வு செய்யப்பட்டு பென்ச்சிலேயே உக்கார வைத்து அனுப்பட்டார். பி.சி.சி.ஐ யினால் அஷ்வின் மற்றும் ஜடேஜா, யுவ்ராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், அவர்கள் யோ-யோ உடல்தகுதி தேர்வில் தேர்வானால் தான் அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியும் என சூசகமாக சொல்கிறது பி.சி.சி.ஐ.
இதனால் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். தற்போது அக்டோபர் 6 ஆம் தேதி ரஞ்சி கோப்பையின் முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது சுற்றுப் போட்டிகள் 14ஆம் தேதி துவங்குகிறது.
இதற்காக அணியில் இருந்து கலட்டி விடப்பட்ட இட்நிய வீரர்கள் அனைவரும் ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாட மும்மூரம் காட்டி வருகின்றனர். முதல் சுற்றுப் போட்டியில் யுவ்ராஜ் சிங் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் கலந்து கொள்ள வில்லை. ஆனால், ரவிச்சந்திரன் அஷ்வின் தமிழக அணிக்காக முதல் போட்டியில் ஆடினார்.
தற்போது இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஆட ஜடேஜா தயாராகி வருகிறார். அவர் தனது சௌராஸ்ட்ரா அணிக்காக ஜம்மு காஷ்மிர் அணியை எதிர்த்து 14ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் விளையாடுவார்.
இதனைப் பற்றி சௌராஸ்ட்ரா அணியின் தலைமை பயிற்சியாளர் சித்தான்சு கோடக் கூறியதாவது,
கடந்த இரு நாட்களாக ஜடேஜா நம்முடன் பயிற்சி எடுத்து வருகிறார். அணியில் அவர் இருப்பது நமக்கு மகிழ்ச்சி தான்.
சௌராஸ்ட்ரா அணி முதல் போட்டியில் ஹரியானா அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த போட்டி நமது மைதானத்தில் ஜம்மு காஷ்மீர் அணியை எதிர்த்து நடக்கவுள்ளது. இந்த போட்டி முகவும் முக்கியமனது. தற்போது முதல் போட்டியில் வெற்றி பெற்று ஒரு நல்ல துவக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளோம். அதே போல் அந்த போட்டியின் மொமென்டத்தை அடுத்தடுத்த போட்டிகளுக்கு கொண்டு செல்வது சற்று முக்கியமான ஒன்றாகும். ஜடேஜாவின் வருகை அணிக்கு ஒரு அனுபவம் வாய்ந்த வீரரைக் கொடுக்கும்.
இரண்டாவது போட்டிக்கு நன்றாகத் தயாராகியுள்ளோம். ஒரு சில இடங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அவற்றையும் சரி செய்து களம் இறங்குவோம். தர்போது ஒரு நல்ல செட்டில் ஆன அணியுடன் தான் இருக்கிறோம்.
ஜடேஜா மற்றும் புஜாராவின் வருகை அணிக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். இது போன்ற ஒரு உந்துதல் தான் அணிக்குத் தேவை.
எனக் கூறினார் சௌராஸ்டரா அணி தலைமை பயிற்சியாளர் சித்தான்சு கோடக்.
ஆஸ்திரேலியாவுடனான கடைசி டி20 போட்டி இன்றுடன் முடிவடியும் நிலையில் அடுத்து நியூய்சிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது.
நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள திறமையான வீரர்களை வைத்து இன்னொரு சர்வதேச அணியைக் கூட உறுவாக்கி விடலாம். இதனை மனதில் வைத்து தான் தேர்வுக்குழு முதல் பயிற்சியாளர், கேப்டன் என அனைவரும், அணியில் இடம் பிடிக்க திறமை மற்றும் அனுபவம் மட்டும் போதாது, கண்டிப்பாக உடல் தகுதியை உறுதி செய்யும் யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அணியில் இடம் என உறுதியாகக் கூறிவிட்டனர்.
அதன் காரணமாகவே, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி படிகளை ஏறி இறங்கி சலித்து விட்டனர் குறிப்பிட்ட சீனியர் வீரர்கள். ஒவ்வொரு முறையும் இந்த தேர்விற்கு சென்று விட்டு சற்று ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.
அதன் பின் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்கள் செட்டேஷ்வர் புஜாரா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இருவரும். தற்போது அவர்கள் கலந்து கொள்ளும் ரஞ்சி கோப்பை தொடர் இருவருக்கும் நன்றாக உதவும்.