ஐபிஎல் ஏலம்: 20 கோடிக்கு இந்த ஆஸி., வீரரை எடுக்க துடிக்கும் அணி! 1

வருகிற ஐபிஎல் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரை சுமார் 20 கோடி வரை பணம் கொடுத்து ஏலத்தில் பெங்களூரு அணி எடுக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா.

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு மினி ஏலம் நடக்கவிருக்கிறது. இது வருகிற பிப்ரவரி 18 அல்லது 19 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக வீரர்களை தக்கவைத்துக் கொள்வதும் வெளியேற்றுவதும் முடிவடைந்துவிட்டது. குறிப்பாக பெங்களூரு அணியில் முக்கிய வீரர்களான உமேஷ் யாதவ், கிறிஸ் மோரிஸ் போன்ற முன்னணி வீரர்களை அந்த அணி வெளியேற்றியுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய் மீதமிருக்கிறது.

ஐபிஎல் ஏலம்: 20 கோடிக்கு இந்த ஆஸி., வீரரை எடுக்க துடிக்கும் அணி! 2

பெங்களூரு அணி தற்பொழுது வேகப்பந்து வீச்சாளர்கள் பலரை வெளியேற்றிவிட்டதால் வருகிற ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை நோக்கியே அவர்களது கவனம் இருக்கும் என யூகிக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “பெங்களூரு அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை வெளியேற்றி இருக்கிறது. ஆகையால் இந்த ஏலத்தில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் எடுக்க ஆர்வம் காட்டுவர்.

ஐபிஎல் ஏலம்: 20 கோடிக்கு இந்த ஆஸி., வீரரை எடுக்க துடிக்கும் அணி! 3

அதேநேரம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இவர்களுக்கு கவனத்தில் இருப்பார். அவருக்கு நிச்சயம் 15 முதல் 20 கோடி வரை பணம் கொடுத்து எடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த அணிக்கு டெத் ஓவரில் பந்துவீச போதிய வீரர்கள் இல்லாததால் இம்முறை ஸ்டார்க்கை எடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களிலிருந்து ஓரிருவரை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *