பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்: அடித்து சொல்லும் லாரா! 1

பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்: அடித்து சொல்லும் லாரா!

பெங்களூரு அணி இம்முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணம் என தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார் விண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா.

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஏற்கனவே லீக் சுற்றுக்கள் முடிவடைந்துவிட்டன. பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை அணி டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது. இரண்டாவது மற்றும் முதல் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

கோப்பையை வெல்லும் கனவில் களமிறங்கிய பெங்களூரு அணி இந்த தவறை இம்முறை மட்டுமல்ல ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் செய்து வருகிறது. அந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல வில்லை என தொடர்ந்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றவுடன் நிச்சயம் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து இறுதிப் போட்டி வரை சென்று விடும் என எதிர்பார்த்திருந்த போது துரதிஸ்டவசமாக எலிமினேட்டர் போட்டியிலேயே வெளியேறியது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் விராத் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரை மட்டுமே அணி ஒவ்வொரு முறை நம்பி இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ப்ளே ஆஃப் போட்டியில் விராட் கோலி சொதப்பிய போதும் டிவில்லியர்ஸ் தனது பங்கிற்கு சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார். இருப்பினும் மற்ற வீரர்கள் பெரிய அளவில் பலன் அளிக்காததால் அந்த அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

அதனை சுட்டிக்காட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா, தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், “பெங்களூரு அணி சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் சில நேரங்களில் சற்று தடுமாறி விடுவதால் அந்த அணிக்கு பெரும் ஆபத்தாக முடிகிறது.

இந்த தொடரின் துவக்கத்தில் பெங்களூர் அணி முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தாமல் தொடர் தோல்விகளால் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது. பெங்களூரு அணி தொடர்ந்து பல ஆண்டுகளாக கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரை மட்டுமே நம்பி இருப்பதால் இந்த தடுமாற்றம் என நான் கருதுகிறேன். அடுத்தடுத்த சீசன்களில் இவர்கள் இருவரை மட்டுமே நம்பி அந்த அணி களம் இறங்க கூடாது. மற்ற வீரர்களிலும் தனது கவனத்தை செலுத்தி சிறப்பான அணியாக உருவாக்க வேண்டும். இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். விரைவில் அதனை அந்த அணி சரி செய்யவும் வேண்டும்.” என தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *