Cricket, India, Parthiv Patel, Ms Dhoni, Dinesh Karthick

மிக இளம் வயதிலேயே தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய பர்திவ் படேல் ,15 வருடத்திற்கு முன்பு 2002ல் இங்கிலாந்திற்கு எதிராக களம் இறங்கினார் பர்திவ், ஆனாலும் அவரால் அந்த இருப்பை தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை.

“17 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய எனக்கு , இளம் வயதில் எல்லா இளைஞர்களை போலவே நானும் எதை பற்றியும் கவலையும், தொய்வும் இருந்தது இல்லை,ஆனால் எனக்கு என் துவக்க சர்வதேச ஆட்டத்தை ஆடிய போது என் கனவு நிறைவேறியதை போல தான் இருந்தது. நான் ஒடு போதும் நினைத்தது இல்லை இப்படி  ஒரு வாய்ப்பு எனக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என்று.” – பர்திவ்

இதுவரை 23 டெஸ்ட் ,38 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 2002ல் இங்கிலாந்திற்கு எதிராக நடந்து டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார்.
ஆனால் அதன் பிறகு அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள தவறிய படேல், அந்த இடத்தை தோனியின் கையில் பரி கொடுத்தார்.

 “தற்போதுஎனது முதல் இலக்கு என்னுடைய ஆட்ட திறத்தை மேம்படுதுவதே ஆகும், எங்க நான் சிறப்பாக செயல்பட இயலும், எங்கு நான் எனது அணிக்கு வெற்றியை  தேடி தர இயலும் என் ஒவ்வொரு நாலும் என்னை நான் மேம்படுத்தி வருகிறேன்.” – பர்திவ்

ரிசப் பான்ட், வ்ரித்திமான் சகா,தினேஷ் கார்டத்திக் என அனைத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஃபார்ம்ல் இருக்கும் நிலையில் தற்போது அந்த போட்டியில் கலந்து கொள்ளும் முனைப்புடன் உள்ளார்.

இந்தியா போன்ற 28 உள்ளூர் அணிகள் கொண்ட மிகப்பெரிய நாட்டில் போட்டி என்பது  எப்போதும் இருக்கும். ்அணியை வெற்றி பெற செய்ய முனைப்புடன் களம்  காணுவோம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. – பர்திவ்

மீண்டும் வந்த படேல்

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய சகாவிற்க்கு பதிலாக மீண்டும் பல ஆண்டுகலுக்கு பின்னர் சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்தார். அது அவருடைய உழைப்பிற்க்கும் அவரது ஆட்ட திறத்தை மேம்படுதியதற்க்கும் கிடைத்த பரிசாகும். கடந்த சில வருடங்கலாகவே ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல் பட்டு வந்தவர் படேல்.

ஒரு கிரிக்கெட்டராக நமக்கு பல கனவுகள் இருக்கும். அதில் ஒன்று தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது. பின்னறே ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் போன்றவைகள் வரும். அதிலும் அவை அனைத்திலும் வெற்றி பெற்ற அணியில் இருப்பது அளப்பரிய ஒன்றாகும்.
எனக்கு அவை அனைத்தும் ஒரே வருடத்தில்  நடந்தது எனக்கு  மகிழ்ச்சியை அளிக்கிறது. – படேல்

நான் தற்போது எனது ஆட்ட திறத்தை மேம்படுத்துவதில் கடினமாக உழைத்து வருகிறேன். கேட்ச் பிடித்தல், ஸ்டெம்ப்பிங்க் செய்தல்,கரடு முரடான பிட்ச்சில் கீப்பிங் செய்தல் போன்றவற்றிர்க்கு தனித்தனியாக பயிற்ச்சி எடுத்து வறுகிறேன். பேட்டிங் மற்றும் கீப்பிங்க்ற்க்கு சமமான அளவு முக்கியத்துவம் கொடுத்து பயிற்ச்சி எடுத்து வருகிறேன். – பர்திவ்

படேல் மீண்டும் சர்வதெச அரங்கில் அடிவைக்க காரணம் அது அவருடைய பேட்டிங்கின் புதிய அணுகுமுறையே ஆகும். அடித்து ஆட கூடிய அவர் தற்போது தன்னை ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காராக நிலைபடுத்தி கொண்டுள்ளார். அதே நேரம் அணியி தேவைக்கேற்ப்ப பிண் வரிசையிலும் இறங்கி அடித்து ஆடும் வல்லமை பெற்றவர் ஆவார்.

பேட்டிங்கை பொறுத்தவரை சிறு சிறு மாற்றங்கள் செய்துள்ளேன். என்னுடைய மனது எப்போதும் என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கும் ,கீப்பிங்கில் செய்யும் போது நீ சிறந்த விக்கெட் கீப்பர்,அதே சமயம் பேட்டிங் செய்யும் போது நீ சிறந்த பேட்ஸ்மேன். இதுவே எனது தாரக மந்திரம். – பர்திவ்

அணியின்  தேவைக்கேற்றவாரு நான் தற்போது எந்த நிலையிலும் ஆட தயராக உள்ளேன்,எதுவாய்யினும் சரி பேட்ஸ்மன்,கீப்பர்,கீபர் பேட்ஸ்மன்,தொடக்க ஆட்டம் அல்லது பினிஷிங்க் ஆட்டம் என் அனைத்து நிலையிலும் ஆட எனக்கு தற்போது தேவையான அனுபவம் உள்ளது. நம்பிக்கை தான் என்னை முன்னிருத்தி செல்கிறது.

தினேஷ் காத்திக் ,சகா போன்ற போட்டியாளர்களுக்கு மத்தியில் தற்போது ரிசப் பான்ட் மற்றும் இசான் கிசான் போன்ற இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேங்களும் உள்ளூர் போட்டிகளிளல் திறமையை காட்டி வருகின்றனர்.

“நான் முன்னர் கூரியதை போலவே வாய்ப்புகள் வந்தால் அதை கண்டிப்பக பயன்படுத்தி கொள்வேன். அதற்க்கு எப்போதும் தயாராக இருப்பேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை வெற்றிகளும் ,தோல்விகளும் நிறைந்தது, எனக்கு எல்லைகலும் நான் எப்போதும் அமைத்துக்கொண்டது இல்லை. அடுத்த உலககோப்பை அணியில் இடம் பெற ஆவலாக உள்ளேன்”, எனக்கூறி பேட்டியை முடித்தார் பர்திவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *