அஸ்வினை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ! ஏதற்கு தெரியுமா ? 1

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருக்கிறது. இதன் மூலம் 1-1 என இந்த டெஸ்ட் தொடர் சமநிலையில் இருக்கிறது.

3ஆவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 7) சிட்னி மைதானத்தில் நடைபெற வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சு அணிக்கு உறுதுணையாக இருந்தது.

அஸ்வினை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ! ஏதற்கு தெரியுமா ? 2

கடந்து இரண்டு டெஸ்டில் 4 இன்னிஸ்சில் பந்துவீசிய அஸ்வின் 10 விக்கெட்டும் பும்ரா 8 விக்கெட்டும் மற்றும் கடைசி இரண்டு இன்னிஸ்சில் பந்துவீசிய சிராஜ் 5 விக்கெட்டும் வீழத்தியிருந்தனர். உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அஸ்வின் குறித்துப்பேசிய அவர், “கடந்த இரண்டு டெஸ்டில் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி தனது அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார். அஸ்வின் டெஸ்டில் மட்டும் இதுவரை 380 விக்கெட்களை வீழத்தியிருக்கிறார்.

அஸ்வினை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ! ஏதற்கு தெரியுமா ? 3

அஸ்வின் பேன்ற ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டுமானால், தங்களது அணியில் கணடிப்பாக மாற்றங்கள் செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் அறிமுக வீரர் சிராஜ் சிறப்பாக பந்து வீசி அணிக்கு மேலும் பலம் சேரத்தனர்.

இந்தியர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள எங்களது பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர். ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் எங்களது சிறப்பாக ஆடத்தை கண்டிப்பாக வெளிப்படுத்துவோம்” என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

அஸ்வினை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ! ஏதற்கு தெரியுமா ? 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *