சரித்திரம் படைத்த விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் செய்த சாதனைகளின் பட்டியல்

விராட் கோலி என்றாலே சற்று கதிகலங்கிப் போகிறார்கள் இப்போதைய பந்து வீச்சாளர்கள். அனைத்து வீரர்களின் மத்தியிலும் ஒரு வித்யாசமான வீரனாகத் தெரிகிறார் விராட். அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு தொடரிலும் பற்பல சாதனைகளை அசால்ட்டாக கட்டி தூக்கி மூலையில் வீசி வருகிறார் விராட் கோலி. சச்சின் சாதனைகள் எல்லாம் இந்த இளம் வயதிலேயே அழகாக எளிதாக முறியடிக்கிறார்.

அப்படி தான் தற்போது நடைபெற்று வரும் (நவ்.24-28) இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 5ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டிகளின் இரட்டை சதத்தை பூர்த்தி செய்துவிட்டார் விராட். மிக எளிதாக இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்து 267 பந்துகளுக்கு 213 ரன் விளாசினார். இதில் 17 ஃபோர்களும், 2 சிக்சர்களும் அடங்கும்.

மேலும், இந்த இரட்டை சதத்தின் மூலம் பல சாதனைகளிய முறியடித்தார். சச்சினின் ஒரு சாதனை, தோனியின் ஒரு சாதனை, ப்ராட்மேனின் ஒரு சாதனை என இன்று அவர் முறியடித்த சாதனைகள் பலவற்றை இங்கு நாங்கள் தொகுத்துள்ளோம். அவற்றைக் கீழே உள்ள ஸ்லைட் பட்டியலில் காணலாம்.

  1. சர்வதேச போட்டிகளில் (அனைத்தும் வகையான போட்டிகலிலும் சேர்த்து) அதிவேகமாக 22 சதங்கள் அடித்துள்ளார் விராட் கோலி. ரிக்கி பாண்டிங், மைக்கேல் க்ளார்க், க்ரீம் ஸ்மித் என அனைவரையும் இந்த பட்டியளில் கீழே தள்ளியுள்ளார் விராட்.
  2. விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டு 3 வருடம் தான் ஆகிறது. அதற்குள் இந்திய வரலாற்றில் உள்ள அனைத்து கேப்டன்கள் அடித்த சதத்தையும் துவம்சம் செய்துள்ளார். தனது அசால்டாக ஆடும் திறத்தால் மீண்டும் மீண்டும் புதிய புதிய சாதனைகளளை படைத்து வருகிறார் கேப்டன் கோலி. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக 12 சதங்கள் அடித்து அந்த பட்டியளில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 
  3. மேலும், சர்வதேச அளவில் கிரிக்கெட் வரலாற்றின் கேப்டன்களில், கேப்டனாக மொத்தம் 5 இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார் விராட். இந்த பட்டியலில் சர்.டான் பிராட்மேன், பிரையன் லாரா ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
  4. அனைத்து வகையான போட்டிகளிலும் சேத்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் தோனியை(15809) பின் தள்ளியுள்ளார் விராட் (15961)
  5. ஓரு வருடத்தில் அதிக சர்வதேச சதங்கள் அடித்த கேப்டனாகியுள்ளார் விராட். மொத்தம் இந்த வருடத்தில் மட்டும் 10 சதங்கள் அடித்துள்ளார்.
  6. இலங்கைக்கு எதிராக இந்தியக் கேப்டனால் அடிக்கப்பட்ட அதிக ரன் இன்று கோலி அடித்த 213 ரன் ஆகும்
  7. இந்தியக் கேப்டனால் அடிக்கப்பட்ட அதிக 150+ ரன் பட்டியலில் கோலி மொத்தம் ஆறு 150+ அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
  8. இந்தியக் கேப்டனால் அடிக்கப்பட்ட அதிக 50+ பட்டியலிலும் கோலி சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் மொத்தம் 19 50+ அடித்து முதலிடத்தில் உள்ளார் கோலி
  9. 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் கேப்டனாக இருந்து 10 சதம் அடித்திருக்கிறார். இந்நிலையில், ஒரே வருடத்தில் அதிக சர்வதேச சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் விராட் கோலி.

ஒரே வருடத்தில் அதிக சர்வதேச சதம் அடித்த கேப்டன்கள் பட்டியல்:

1. விராட் கோலி – 10 (2017)
2. ரிக்கி பாண்டிங் – 9 (2005)
3. க்ரேம் ஸ்மித் – 9 (2005)
4. ரிக்கி பாண்டிங் – 9 (2006)

Editor:

This website uses cookies.