இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளி விஜயை வம்பிலுக்கும் வகையில் ரசிகர்கள் செய்த செயல் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சேலத்தில் நடைபெற்ற மதுரை பாந்தர்ஸ் மட்டும் திருச்சி ரூபி ஆகிய அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் போட்டியில் முரளி விஜய் திருச்சி அணிக்காக விளையாடினார்.
மதுரை அணி பேட்டிங் செய்த பொழுது பௌண்டரி ஓரத்தில் பில்டிங் செய்து கொண்டிருந்த முரளி விஜயை நோக்கி ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் தினேஷ் கார்த்திக்(DK..DK..) என்று கோஷம் எழுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த முரளி விஜய் ரசிகர்களை அமைதியாக இருக்கும் படி கூறினார். ரசிகர்கள் அதை பொருட்படுத்தாமல் இன்னும் அதிகமாக முரளி விஜயை வம்பிழுத்தனர் இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தினேஷ் கார்த்திக் முரளி விஜய் மோதல்….
ஒரு காலத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். ஆனால் அப்பொழுது தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் ரெகுலர் வீரராக இடம் பெறவில்லை. ஆனால் முரளி விஜய் அப்போது இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக வலம் வந்தார்.
அப்போது தினேஷ் கார்த்திக்கின் மனைவி நிக்கிதாவிர்க்கு முரளி விஜய்யுடன் தொடர்பு ஏற்பட்டு தினேஷ் கார்த்திக்கின் உறவை முறித்துக் முரளி விஜயை திருமணம் செய்து கொண்டார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிக பரவலாக பேசப்பட்டு வந்தது.
காலமே அனைத்திற்கு பதில் சொல்லும் என்பது போல்.,முரளி விஜய் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்பொழுது இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக தினேஷ் கார்த்திக் வலம் வருகிறார். அதேபோன்று தினேஷ் கார்த்திக் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
நண்பனுக்கே துரோகம் செய்துவிட்டார் என்பதால் ரசிகர்கள் இவ்வாறு கோஷம் எழுப்பி முரளி விஜய் ஏளனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.