தென்னாபிரிக்கா ஒருநாள் தொடர்: ரோகித் சர்மா இல்லைனா.. இவர்தான் கேப்டனாம்; தகவலை கசியவிட்ட பிசிசிஐ!! 1

தென்னாபிரிக்கா ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை என்றால், அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்று முதல் கட்டமாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கியது. டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

தென்னாபிரிக்கா ஒருநாள் தொடர்: ரோகித் சர்மா இல்லைனா.. இவர்தான் கேப்டனாம்; தகவலை கசியவிட்ட பிசிசிஐ!! 2

டெஸ்ட் தொடரில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளுக்கு தென்னாபிரிக்கா தொடரின்போது முதல்முறையாக கேப்டன் பொறுப்பு வகிக்க இருந்தார். டெஸ்ட் தொடருக்கு முன்பாக தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

ஒருநாள் தொடர் துவங்குவதற்கு முன்பாக ரோகித்சர்மா குணமடைந்து விடுவார் என்று கூறப்படுகின்றன. தற்போது அவர் இந்திய தேசியக் அகடமியில் சிகிச்சை பெற்று, அவ்வபோது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருநாள் தொடர் துவங்குவதற்கு முன்பாக ரோகித்சர்மா குணமடையவில்லை என்றால் அவருக்கு பதிலாக யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்கிற ஆலோசனைகள் இந்திய தேர்வு குழு அதிகாரிகள் மத்தியில் நடைபெற்று வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்கா ஒருநாள் தொடர்: ரோகித் சர்மா இல்லைனா.. இவர்தான் கேப்டனாம்; தகவலை கசியவிட்ட பிசிசிஐ!! 3

டெஸ்ட் போட்டியில் புதிதாக துணை கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ள கேஎல் ராகுலுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து ஆங்கில வார இதழ் வெளியிட்டுள்ள தகவலில், “ரோகித் சர்மா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் குணமடையவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையாக, தென்னபிரிக்காவுடனான ஒருநாள் போட்டிகளுக்கு கே எல் ராகுலை கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார்.” என செய்தி வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியில் தற்காலிகமாக துணை கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வரும் கேஎல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மிகவும் நிதானத்துடன் விளையாடி சதம் விளாசினார். முதல் நாள் முடிவில் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து மழை பெய்ததால் தடைபட்டது. நாளை மற்றும் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் மழைப்பொழிவு சற்று குறைவாக இருக்கும் என தகவல்கள் வந்துள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *