பொலார்டு, ஹர்திக் பாண்டியா தேவை இல்லை... இந்த இரண்டு வீரர்கள் மட்டும் போதும் ; பக்கா பிளானில் மும்பை இந்தியன்ஸ் !! 1

2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து அணிகளும் எந்த வீரரை தக்கவைத்து கொள்ளலாம்..?எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம்..? எந்த புதிய வீரர்களை அணியில் இணைக்கலாம்…?  என்ற திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகிறது.

குறிப்பாக ஏலம் நெருங்க நெருங்க முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான அணிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

பொலார்டு, ஹர்திக் பாண்டியா தேவை இல்லை... இந்த இரண்டு வீரர்கள் மட்டும் போதும் ; பக்கா பிளானில் மும்பை இந்தியன்ஸ் !! 2

இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை எல்லாம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இரு வீரர்களையும் தனது அணியில் தக்க வைத்து விட்டது, இருந்தபோதும் ஒரு அணியில் நான்கு வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் இன்னும் இரண்டு வீரர்கள் யாரை தக்க வைக்கலாம் யோசித்து வருகிறது. அதில் கீழ் கூறப்பட்ட மூன்று வீரர்களில் எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பொலார்டு, ஹர்திக் பாண்டியா தேவை இல்லை... இந்த இரண்டு வீரர்கள் மட்டும் போதும் ; பக்கா பிளானில் மும்பை இந்தியன்ஸ் !! 3

அதில்,வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கெரான் பொலார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை திறம்பட வழிநடத்தி ஒரு நல்ல கேப்டனாகவும் திகழ்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட பொல்லார்ட்டை தக்க வைப்போமா..?, அல்லது மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் அதிரடி துவக்க வீரர் இஷான் கிஷனை தக்கவைப்போமா..?,அல்லது டி20 தொடரில் வளர்ந்து வரும் வீரராக அறியப்படும் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவை தக்க வைத்துக் கொள்வோமா..? என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் கடுமையாக யோசித்து வருகிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *