கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுகிறார் மிட்செல் மார்ஸ்..? 1

கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுகிறார் மிட்செல் மார்ஸ்..?

தொடர்ந்து சொதப்பி வரும் மிட்செல் மார்ஷ் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடக்கவுள்ள 4வது டெஸ்டில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் ஜன. 3ல் சிட்னியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 1–2 என பின்தங்கி உள்ள ஆஸ்திரேலிய அணி, சிட்னி டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுகிறார் மிட்செல் மார்ஸ்..? 2

இதனையடுத்து 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சுஆல்ரவுண்டர்மார்னஸ் லாபஸ்சாக்னே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 2 போட்டியில் (81 ரன், 7 விக்கெட்) விளையாடி உள்ளார். இந்திய தொடருக்கு பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மிட்சல் மார்ஷ் ஆகியோர்மிடில்ஆர்டரில்இடம் பிடித்திருந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில், தொடர்ந்து சொதப்பி வரும் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரரான மார்னஸ் லாபஸ்சாக்னேவை களமிறக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுகிறார் மிட்செல் மார்ஸ்..? 3

அதே வேளையில், ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து சொதப்பும் மற்றொரு வீரரான ஆரோன் பின்ச் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்னஸ் சேர்க்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

என்ன நடக்கும், யாருக்கு பதில் யார் அணியில் இடம்பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆஸி., அணி டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ், மிட்சல் மார்ஷ், நாதன் லியான், ஷான் மார்ஷ், பட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *