2022 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வலைவிரிக்கும் அணிகள் குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைய உள்ளதால் 2022 தொடருக்கான மெகா ஏலத்தில் எந்த வீரரை தனது அணியில் தக்க வைத்துக்கொள்ளலாம் எந்த புது வீரரை தனது அணியில் இணைத்துக் கொள்ளலாம் எந்த வீரரை தனது அணியில் இருந்து நீக்கலாம் என்று ஒவ்வொரு அணியும் திட்டமிட்டு வருகிறது மேலும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளும் எந்த வீரரை கேப்டனாக்கும் என்ற பேச்சுகளும் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிதாக இணைய உள்ள இரண்டு வழிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு கேப்டனாக செயல்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.

2021 இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், மேலும் அவருக்கு பதில் அந்த அணியின் கேப்டனாக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். பின் 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் காயத்திலிருந்து குணமாகிய ஸ்ரேயாஸ் ஐயர், மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார். இருந்தபோதும் டெல்லி அணி அந்த அணியின் கேப்டனாக ரிஷப் பண்டை தொடருமாறு அறிவுறுத்தியது. இதனை சரியாக பயன்படுத்திய ரிஷப் பண்ட் மிக சிறந்த முறையில் டெல்லி அணியை வழிநடத்தி பிளே ஆப் சுற்றுவரை முன்னேறச் செய்தார்.
இருந்தபோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் எதிர்பாராதவிதமாக டெல்லி அணி தோல்வியைத் தழுவியது, அப்படி டெல்லி அணி தோல்வியை தழுவினாலும் ரிஷப் பண்ட் மிகச்சிறந்த முறையிலேயே அணியை வழி நடத்தினார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்டை பாராட்டினர், இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியிலிருந்து விலகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களது அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிப்பதற்கு முயற்சி செய்து வரும் நிலையில் புதிதாக இணைய உள்ள இரண்டு அணிகளும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது தங்களது கவனத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக பயணித்த ஸ்ரேயாஸ் ஐயர் புதிய அணியின் கேப்டனாக திகழ்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவே கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி அணியில் தக்க வைக்கப்படுவாரா?, அல்லது புதிய அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவாரா?, அல்லது வேறு ஒரு அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாக அனைவர் மனதிலும் ஓடிக் கொண்டுள்ளது.
என்னதான் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்