சூர்யகுமார் யாதவ்
விலகும் மிக முக்கியமான வீரர்; புதிய அவதாரம் எடுக்கும் சூர்யகுமார் யாதவ்… நடந்தா செம்ம மாஸ்

வங்கதேச அணியுடனான எதிர்வரும் டெஸ்ட் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடருக்கு பிறகு, இந்திய அணி வங்கதேச அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த மாத இறுதியில் வங்கேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

விலகும் மிக முக்கியமான வீரர்; புதிய அவதாரம் எடுக்கும் சூர்யகுமார் யாதவ்... நடந்தா செம்ம மாஸ் !! 1

 

நியூசிலாந்து அணியுடனான நடப்பு தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் வங்கதேச அணியுடனான தொடரில் அணிக்கு திரும்ப உள்ளனர். இதில் டெஸ்ட் தொடருக்கான அணியில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற்றிருந்தார்.

இந்தநிலையில், காயத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜா இன்னும் முழுமையாக குணமடையாதால் அவர் வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரிலும் விளையாட வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

சூர்யகுமார் யாதவ்

முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா, வங்கதேச தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்திய டி.20 அணியின் மிகப்பெரும் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வரும் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி.20 போட்டிகளில் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இதன் மூலம் சர்வதேச டி.20 போட்டிகளுக்கான தரவரிசையிலும் முதலிடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் போட்டியிலும் கால் பதிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், கே.எல் ராகுல், ஸ்ரீகர் பாரத், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *