டெல்லி கிரிக்கெட்டின் அறிவுரை கமிட்டியில் இருந்த முன்னால் இந்திய வீரர் சேவாக் அந்த கமிட்டியில் இருந்து விலகியுள்ளார்.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் மனம் திறந்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள சேவாக், சேவாக், “ மகேந்திர சிங் தோனி 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். ஒருவேளை ரிஷப் பந்துக்கு தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு அளித்தாலும் உலகக்கோப்பை தொடர் வரை 15 முதல் 16 போட்டிகளில்தான் அவரால் விளையாட முடியும்.
தோனியுடன் ஒப்பிட்டால் இது உலகக்கோப்பைக்கு போதுமானது அல்ல. தோனி 300-க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ரிஷப் தோனி போன்று அதிரடியாக சிக்ஸர் அடிக்கலாம். ஆனால், நீங்கள் தோனி குறித்துப் பேசினால். அவர் தனி நபராக அணிக்கு வெற்றியைத் தேடித்தரக்கூடியவர்” என்றார்.
ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஆசியக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் தோனி இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக மஹேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். ஏற்கனவே முழு நேர கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்த தோனி, ஓய்வு பெறும் கட்டத்தில் உள்ளார்.

இதைத் தொடர்ந்து சேவாக் கூறுகையில்,
“தற்போதிலிருந்தே ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தொடங்கினால் உலகக்கோப்பை வரையில் 15 முதல் 16 ஆட்டங்கள் வரை தான் ஆடியிருப்பார். இது, 300 போட்டிகளுக்கும் மேல் ஆடியுள்ள தோனியை விட மிகக் குறைவு. உலகக்கோப்பை வரை தோனி அணியில் நீடிக்க வேண்டுமென நினைக்கிறேன்.
தோனியின் விக்கெட் கீப்பிங் வாரிசாக ரிஷப் பண்டுக்கு சரியான மனநிலை உள்ளது. தோனி ஓய்வு பெற்ற பின்னர் அவரது பொறுப்பை பண்ட்டுக்கு வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், வரவிருக்கும் ஆசிய கோப்பையில், நடப்பு சாம்பியனான இந்திய அணி இம்முறையும் கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.