புதிதாக மாறியுள்ள பிசிசிஐ வரைமுறை அனைத்து அணி நிர்வாகமும் கொண்டாட்டம்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுமா நடைபெறாது என்பது இன்னும் சந்தேகமாக தான் உள்ளது. ஒருவேளை இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை என்றால் அடுத்த ஆண்டுதான் ஐபிஎல் தொடர் நடைபெறும். ஆனால் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் புதிதாக மாறி இருக்கும்.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்பது குறித்து பிசிசிஐ விரைவில் தெரிவிப்பதாக கூறியிருக்கிறது. அதனடிப்படையில் தற்பொழுது ஒரு புதிய மாற்றத்தை பிசிசிஐ கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்
ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள மூன்று வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை வெளியேற்றிவிட வேண்டும். அதன் பின்னர் தகுந்த ஆர்டிஎம் ஆப்ஷன்கள் ஒவ்வொரு அணிக்கும் கொடுக்கப்படும். இதுதான் முன்பாக இருந்த பிசிசிஐ சட்ட வரைமுறை. ஆனால் தற்பொழுது இது மாற வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியிலிருந்து 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். எனவே கூடுதலாக ஒரு வீரர்களை தக்க வைத்துக் கொள்வது ஒவ்வொரு அணிக்கும் அட்வான்டேஜாக அடையும். அதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தற்பொழுது மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
ஆர்டிஎம் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டால் நிச்சயமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்
நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்ட பின்னர் ஆர்டிஎம் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டால் ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை ஏலத்தில் நடுவில் அந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி இரண்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன்படி பார்த்தால் எப்படியும் ஒரு அணி தங்களது அணியில் இருக்கும் சிறந்த ஆறு வீரர்களை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒவ்வொரு அணி நிர்வாகமும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு ஐபிஎல் அணி ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக இந்த புதிய வரைமுறை நிறைய அணிகளுக்கு உத்வேகமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் போகிறது என்பதும் கூடுதல் சிறப்பு.