இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் விளையாட முடியாது. காயம் காரணமாக அவர் தற்பொழுது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என தற்போது இவர்கள் இருவரும் காயமடைந்து உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் இருவரும் தற்போது சிகிச்சை எடுத்து கொள்ள இருக்கிறார்கள். மொத்தத்தில் இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது.
எனவே இவர்கள் சார்பாக வேறு வீரர்களை விளையாட வைக்க இந்திய நிர்வாகம் முடிவு செய்தது. அதனடிப்படையில் சூரியகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா இவர்கள் இருவரையும் விளையாட வைக்க இந்திய நிர்வாகம் தற்போது முடிவெடுத்துள்ளது. இவர்கள் இருவரும் தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றனர். கூடிய விரைவில் இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் இருக்கும் அணியுடன் இணைந்து டெஸ்ட்களில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கும் நிலையில் படிக்கல்லுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்வியை தற்போது எழுப்பியுள்ளனர். அதற்கு சில விளக்கம் தற்போது இந்திய நிர்வாகம் சார்பாக நமக்கு கிடைத்துள்ளது
அனுபவம் இல்லாதது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது
சூரியகுமார் யாதவ் நிறைய உள்ளூர் போட்டிகளில் அதேபோல பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் அதே போல பிரித்வி ஷா விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படிக்கல் மொத்தமாக 15 பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இந்த 15 போட்டிகளில் 10 அரைசதம் அடித்து அவரது அவரேஜ் 34 ஆக மட்டுமே உள்ளது. இந்த அனுபவம் டெஸ்ட் அணியில் விளையாடும் அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற இந்திய நிர்வாகம் கருதியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் படிக்கல் உள்ளூர் ஆட்டங்களில் அதேபோல ஐபிஎல் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு வயது மிகக் குறைவு. நிச்சயமாக இனிவரும் காலகட்டங்களில் அவருடைய அனுபவம் சற்று அதிகரிக்கும். எனவே பின்னாளில் அவர் நிச்சயமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்றும் தற்போதைக்கு அந்த வாய்ப்பு சற்று தள்ளி போய் உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் களமிறங்க அதிக வாய்ப்பு
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி நடந்து முடிந்த நிலையில் படிக்கல் ஒரு ஆட்டத்தில் கூட இன்னும் களம் இறங்கி விளையாட வில்லை. இருப்பினும் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அனைத்து வீரர்களுக்கும் நிச்சயமாக ஒரு வாய்ப்பு நான் வழங்குவேன் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் எஞ்சியுள்ள இரு டி20 போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் அவர் களம் இறங்கி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அவருடைய ஆட்டத்தை காண அனைத்து இந்திய ரசிகர்களும் ஆர்வமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.