தோனி அணியும் ஹெல்மெட்டில் இந்திய தேசிய கொடி ஏன் இல்லை தெரியுமா..? உண்மை காரணம் வெளியானது 1
தோனி அணியும் ஹெல்மெட்டில் இந்திய தேசிய கொடி ஏன் இல்லை தெரியுமா..? உண்மை காரணம் வெளியானது

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் இந்திய தேசிய கொடி பொறிக்கப்பட்டுள்ள  ஹெல்மெட்டுடன் விளையாடும் போது, அது தோனி அணியும் ஹெல்மெட்டில் மட்டும் ஏன் இல்லை என்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

தோனி அணியும் ஹெல்மெட்டில் இந்திய தேசிய கொடி ஏன் இல்லை தெரியுமா..? உண்மை காரணம் வெளியானது 2

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையானகவும், வெற்றி கேப்டனாகவும் இருந்த தோனி, கடந்த வருடம் திடீரென தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை துறந்தார். இதன் பின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கோஹ்லிக்கு கீழ் சாதரண ஒரு வீரராக விளையாடி வருகிறார்.

சுயநலம் இல்லாத கிரிக்கெட் வீரர் என்று பெயரெடுத்த தோனியின் கிரிக்கெட் போட்டிகளின் போது அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் மட்டும் ஏன் இந்தியாவின் தேசிய கொடியான மூவர்ண கொடி இல்லை என்பது இதனை கவனித்தவர்கள் மனதில் எழுந்திருக்கும்.

இந்திய அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய தேசிய கொடி பொறிக்கப்பட்டுள்ள ஹெல்மட் அணிந்திருக்கும் நிலையில், தோனி மட்டும் அணியாமல் இருப்பதை சிலர் அவருக்கு தேசப்பற்று இல்லை போலும் என்றும் விமர்சித்து உள்ளனர்.

தோனி அணியும் ஹெல்மெட்டில் இந்திய தேசிய கொடி ஏன் இல்லை தெரியுமா..? உண்மை காரணம் வெளியானது 3

ஆனால், இதற்கெல்லாம் உண்மையான பதில் தோனியின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், தோனி விக்கெட் கீப்பர் என்பதால் அவர் சில பல நேரங்களில் தனது ஹெல்மட்டை தரையில் வைத்துவிட்டு விளையாட வேண்டிய சூழல் ஏற்படும், அவ்வாறு வைக்கும் போது சில சமயங்களில் பந்து அந்த ஹெல்மட்டை மற்ற வீரர்கள் தெரியாமல் மிதிப்பதற்கும் வாய்புண்டு, இதன் காரணமாகவே  தனது தாய்நாட்டு கொடி தரையில் இருப்பதை தோனி விரும்பாமலே மூவர்ண கொடி இல்லாத ஹெல்மெட்டுடன் விளையாடி வருகிறாராம்.

தோனி அணியும் ஹெல்மெட்டில் இந்திய தேசிய கொடி ஏன் இல்லை தெரியுமா..? உண்மை காரணம் வெளியானது 4

இது சிறிய காரணமாக இருப்பதால் பலருக்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும் இது தான்  உண்மை. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டின் போதும், தோனியின் மனைவி கர்பமாக இருந்ததும், அது குறித்து தோனியிடம் கேட்ட போது எனக்கு நாட்டுக்காக விளையாடுவது தான் முதல் பணி என்று தெரிவித்திருந்தது இங்கு நினைவு கூற தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *