இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
4வது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் சதத்தால், 50 ஓவர் முடிவில் 334 ரன் எடுத்தது.
இந்த இலக்கை துரத்திய ரோஹித் மற்றும் ரஹானே அற்புதமாக விளையாடினார்கள். ஆனால், பின்பு வந்த வீரர்கள் அதை சரியாக உபயோக படுத்தவில்லை. கடைசி 5 ஓவரில் 50 ரன் இந்திய அணிக்கு தேவை பட்டது. பல போட்டிகளை வென்று கொடுத்த தல தோனி, இந்த போட்டியை வெற்றி பெற்று தருவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டார்கள். ஆனால், ரிச்சர்ட்சன் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு போல்ட் ஆனார். இதனால், இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றது.
கடைசி நேரத்தில் ஆக்ரோஷமான தோனியை போல்ட் ஆக்கினார் கேன் ரிச்சர்ட்சன். அந்த போட்டி முடிந்ததும், தோனிக்கு பந்துவீசும் போது எப்படி இருந்தது என கூறினார்.
“ஹ்ம்ம்… சரியாக தான் சென்றது. ஆனால், இந்த நாட்களில் 3 ஓவருக்கு 40 ரன் அடிப்பது கடினம் இல்லை. இதனால், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறிய பிளான்களை பின் பற்றினோம் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று ஸ்டீவ் ஸ்மித்தும் கூறினார். எங்களால் முடிந்த வரை எங்களது பிளானை வெளிப்படுத்த நினைத்தோம்,” என ரிச்சர்ட்சன் கூறினார்.
இந்திய அணியின் தோனிக்கு பந்துவீசும் போது பதட்டமாக இருந்ததா? என்ற கேள்விக்கும் பதிலளித்தார்.
“இதற்கு முன்பு கடைசி நேரத்தில் பந்து வீசி அனுபவம் இல்லை. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தோனிக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். ஆனால், அவருக்கு பந்துவீசியதில்லை. இதனால், எங்களுடைய பிளானை வெளிப்படுத்த பதட்டமாக இருந்தது. இதனால், இதை பற்றி ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்டேன், ஏனென்றால் தோனியுடன் அவர் விளையாடியுள்ளார். அவர் கூறியதை செய்தோம், நல்லவேலை நேற்று அது வேலை செய்தது,” என ரிச்சர்ட்சன் மேலும் தெரிவித்தார்.
இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 1ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 4வது போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றவுடன், ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து கீழே வந்துவிட்டது. மீண்டும் முதல் இடத்தை பிடிக்க ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவேண்டும்.