எனன்னப்பா இப்பவே இப்படி மிரட்டுறான் இவன்… வியப்பில் ரிக்கி பாண்டிங் !! 1
எனன்னப்பா இப்பவே இப்படி மிரட்டுறான் இவன்… வியப்பில் ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் பந்துவீச்சாளரான ஸ்டான்லெக்கின் பந்துவீச்சில் எதோ தனித்தன்மை உள்ளதை தான் உணர்வதாக அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய இளம் வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் பந்து வீசும் விதத்தை பார்க்கவே அருமையாக இருக்கிறது.

எனன்னப்பா இப்பவே இப்படி மிரட்டுறான் இவன்… வியப்பில் ரிக்கி பாண்டிங் !! 2

கிட்டத்தட்ட 7 அடி உயரத்தில் இருக்கிறார். இதே போல் மணிக்கு ஏறக்குறைய 150 கிலோமீட்டர் வேகத்தில் பவுலிங் செய்வதுடன், புதிய பந்தில் ஸ்விங்கும் செய்கிறார். இன்னும் சிறந்த நிலையை எட்ட அவர் கொஞ்சம் உடல்எடையை அதிகரிக்க வேண்டும். வரலாற்றில், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அவர் உருவெடுக்க வாய்ப்புள்ளது’ என்றார். 23 வயதான ஸ்டான்லேக்கை ஐ.பி.எல். ஏலத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

எனன்னப்பா இப்பவே இப்படி மிரட்டுறான் இவன்… வியப்பில் ரிக்கி பாண்டிங் !! 3
Former Australia skipper Ricky Ponting feels that pacer Billy Stanlake has the talent to finish as one of the greatest bowlers to have played the gentleman’s game.

 

சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் படடம் வென்றது.

ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக தன்னை போல் சம பலம் கொண்ட தென் ஆப்ரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *