எனக்கு இந்த பையனை ரொம்ப வருஷமா தெரியும்... முன்னடியெல்லாம் பேட்டிங்கே சரியாவராது, இப்போ என்னடான்னா வேறலெவல்ல ஆடுறான் - டெஸ்ட்டில் அசத்திய இந்திய வீரரை பற்றி பேசிய ரிக்கி பாண்டிங்! 1

அக்சர் பட்டேலை நிறைய உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் விளையாட வையுங்கள், அடுத்த சில வருடங்களுக்கு இந்திய அணியின் கீழ் வரிசை பேட்டிங்கை இவர் பார்த்துக்கொள்வார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ரிக்கி பாண்டிங்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்று தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை தட்டி தூக்கியது.

எனக்கு இந்த பையனை ரொம்ப வருஷமா தெரியும்... முன்னடியெல்லாம் பேட்டிங்கே சரியாவராது, இப்போ என்னடான்னா வேறலெவல்ல ஆடுறான் - டெஸ்ட்டில் அசத்திய இந்திய வீரரை பற்றி பேசிய ரிக்கி பாண்டிங்! 2

இம்முறை இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராஃபியை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ஆல்ரவுண்டர்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். ஏனெனில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 220 ரன்கள் மற்றும் 47 விக்கெட் கைப்பற்றினர். இவர்களுக்கு இணைந்து தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த தொடரில் அங்கீகரிக்கப்படாத ஹீரோவாக திகழ்ந்தவர் அக்சர் பட்டேல். முதல் டெஸ்டில் இவர் அடித்த 84 ரன்கள் மற்றும் நான்காவது டெஸ்டில் இவர் அடித்த 79 ரன்கள் மிகமுக்கியமானவை. அதன் பிறகு டெல்லி டெஸ்டில், இந்திய அணி 137 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இவர் அடித்த 74 ரன்கள் மற்றும் அஸ்வின் உடன் சேர்ந்து இவர் அமைத்த பார்ட்னர்ஷிப் என்று அனைத்தும் இந்திய அணிக்கு முக்கியமான கட்டத்தில் வந்தது.

எனக்கு இந்த பையனை ரொம்ப வருஷமா தெரியும்... முன்னடியெல்லாம் பேட்டிங்கே சரியாவராது, இப்போ என்னடான்னா வேறலெவல்ல ஆடுறான் - டெஸ்ட்டில் அசத்திய இந்திய வீரரை பற்றி பேசிய ரிக்கி பாண்டிங்! 3

கவாஜா மற்றும் விராட் கோலி இருவருக்கும் அடுத்தபடியாக இந்த தொடரில் அதிக ஸ்கோரை அடித்தவர்கள் பட்டியலில் அக்சர் பட்டேல்(264) மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இப்படி மிகச் சிறப்பாக செயல்பட்ட அக்சர் பட்டேலை குறிப்பிட்டு, கடந்த காலங்களில் அவருக்கு இருந்த பிரச்சனை மற்றும் சமீபத்தில் அவர் செயல்பட்டு வரும் விதம் குறித்து பேசியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

“மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோதே அக்சர் பட்டேலை எனக்கு நன்றாக தெரியும். அப்போதெல்லாம் இவருக்கு சாட் பந்துகளில் பிரச்சினை இருந்தது.  இவரிடம் சில சிறந்த பேட்டிங் டெக்னிக் இருந்தது. கடைசி இரண்டு ஆண்டுகளைத் தவிர, அதற்கு முன்னர் இவரது பேட்டிங்  ஐபிஎல் தரத்திலும் இல்லை, உலக தரத்திலும் இல்லை. நன்றாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு இந்த பையனை ரொம்ப வருஷமா தெரியும்... முன்னடியெல்லாம் பேட்டிங்கே சரியாவராது, இப்போ என்னடான்னா வேறலெவல்ல ஆடுறான் - டெஸ்ட்டில் அசத்திய இந்திய வீரரை பற்றி பேசிய ரிக்கி பாண்டிங்! 4

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை நிறைய உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் கவுண்டி டெஸ்ட் தொடர்களில் விளையாட வைத்தால் இந்திய அணிக்கு ஆறாவது அல்லது ஏழாவது இடத்தை இன்னும் சில வருடங்கள் பிடித்துக் கொண்டு நீடித்து நிற்பார்.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ரிக்கி பாண்டிங்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *