14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சிஎஸ்கே இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமாக தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான இஷாந்த் ஷர்மாவும் இடம்பெறவில்லை. இஷாந்த் ஷர்மாவு க்கு குதிகாலில் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த ஐபிஎல்லில் காயம் ஏற்பட்டு பாதிலயே வெளியேறினார். இதன்பிறகு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரில் விளையாடினார். இதையடுத்து சையத் முஷ்டாக் அலி தொடரிலும் கம்பேக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இவரை டெல்லி அணி இந்த ஆண்டிற்கு தக்கவைத்து கொண்டது. ஆனால் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் இவர் விளையாடவில்லை. இதுகுறித்து பேசிய டெல்லி கோச் ரிக்கி பாண்டிங் “இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த சர்மா குதிகால் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் தான் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இவருக்கு பதிலாக சிறந்த பிட்னஸில் இருந்த ஆகவேஷ் கானை தேர்வு செய்தோம். இவரது லைன், லெனத், வேகம் மற்றும் ஸ்லோ பந்துகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். உண்மையிலயே இவரை போன்ற ஒரு சிறந்த வீரரை கண்டுப்படித்தில் மகிழ்ச்சி” என்று ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.
