ரவிச்சந்திரன் அஸ்வின் காயம் பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்ட ரிக்கி பாண்டிங்!!
ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அணி 157 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்து சூப்பர் ஓவர் ஆனது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி எளிதில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது அற்புதமாக பந்து பேசிக்கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் காயமடைந்தார். ஒரு ஓவர் வீசி 2 விக்கெட் வீழ்த்தி 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். அந்த ஓவரின் இறுதியில் டைவ் அடித்து ஒரு பந்தை பிடித்தார். அப்போது அவர் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வேதனை மிகுந்த முகத்துடன் வலியால் துடித்து மைதானத்தில் இருந்து வெளியேறினர் அஸ்வின்.
Still buzzing the morning after! Thrilled with the way we fought back after our start, @MStoinis with both bat and ball and @KagisoRabada25 with a quality super over.
We'll find out more about @ashwinravi99's injury soon and hopefully he's ok to play against the Super Kings. https://t.co/MxljKCqqYx
— Ricky Ponting AO (@RickyPonting) September 21, 2020
மேலும் அவருடைய கோரிக்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அடுத்த போட்டியில் ஆட முடியுமா அல்லது எத்தனை போட்டிகளில் ஆட முடியாது என்பது குறித்து ஆய்வு செய்து அறிவிப்போம் என்பது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.