திறமை இருந்தும் பயன் இல்லை… இந்திய டி.20 அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட மூன்று திறமையான வீரர்கள்
விண்டீஸ் அணியுடனான டி.20 தொடரில் இருந்து காரணமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வழக்கம் போல், ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் விண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அதே வேளையில், டி.20 தொடருக்கான இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியின் கீழ் விளையாட உள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தாலும், ரிங்கு சிங், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற சில திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்தவகையில், விண்டீஸ் அணியுடனான டி.20 தொடரில் திறமை இருந்தும் புறக்கணிக்கப்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
3 – ரிங்கு சிங்;
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து திலக் வர்மா, இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், திலக் வர்மாவை விட ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், 14 போட்டிகளில் விளையாடி அதில் 474 ரன்கள் எடுத்திருந்தார். இக்கட்டான பல போட்டிகளில் தனி ஆளாக களத்தில் இருந்து கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்திருக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாகவும் உள்ளது.