2 – சாய் சுதர்சன்;
தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சன், 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் இல்லாமல் அனைத்து உள்ளூர் தொடர்களிலும் பேட்டிங்கில் மிக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய சாய் சுதர்சன் அதில் 362 ரன்கள் குவித்துள்ளார். சாய் சுதர்சனின் சராசரி 51+ ஆகும். குட்டி மைக்கெல் ஹசி என பாராட்டப்படும் அளவிற்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் சுதர்சனுக்கு விண்டீஸ் அணியுடனான டி.20 தொடரில் இடம் கிடைக்காததை கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.