இந்த வீரர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்வோர்; வாழ்த்திய தினேஷ் கார்த்திக்!! 1

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சியும் எடுத்து வருகின்றனர். அதே போல் மறுபுறம் கிட்டத்தட்ட டி.20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் இந்த இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த வீரர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்வோர்; வாழ்த்திய தினேஷ் கார்த்திக்!! 2

இந்நிலையில் இந்தப் போட்டி குறித்தான செய்திகளை கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை அதிகம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ரிஷப் பண்ட் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் கடந்த 6 மாதங்களாக மிகச் சிறந்த தனது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பலமுறை வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப் பயணத்தின் போது மிக சிறந்த முறையில் செயல்பட்டு இந்திய அணிக்கு அபார வெற்றியைப் பெற்றுக் கொடுத்து மிகப் பிரபலமான வீரராக திகழ்கிறார்.மேலும் இவரது விக்கெட்டை வீழ்த்துவது என்பது சர்வதேச முன்னணி பந்துவீச்சாளர்கள் இருக்கும் மிகப் பெரும் சவாலாகவே உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்த வீரர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்வோர்; வாழ்த்திய தினேஷ் கார்த்திக்!! 3

இந்நிலையில் ரிஷப் பண்ட் குறிப்பு தினேஷ் கார்த்திக் கூறியதாவது, ரிஷப் பண்ட் மிக சிறப்பாக செயல்படுகிறார் இவருடைய ஆட்டத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன் என்று கூறிய இவர் ரிஷப் பண்ட் இக்கட்டான நிலைமையையும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டியுள்ளார். மேலும் குறுகிய காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு பிரபல்யம் அடைந்து விட்டார் என்றும் பாராட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது, இவர் சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தனி ஆளாக நின்று மிக சிறப்பாக செயல்பட்டு தனது அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தார் அது தற்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறது, மேலும் ரிஷப் பண்ட் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை விட்டுக் கொடுத்தார் என்று தெரிவித்தார். மேலும் இவர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளிலும் மற்றும் அதிகமான ஒயிட் பால் போட்டிகளிலும் பங்கு கொள்வர் எனக்கு தினேஷ் கார்த்திக் ரிஷப் பண்டை வாழ்த்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *