முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரரும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கிரிக்கெட் இயக்குனருமான மைக் ஹெசன் ரிஷப் பண்ட் முன்புபோல் தற்பொழுது கிடையாது என்று கூறியிருக்கிறார். அவர் ஒரு வீரராக நிறைய மாறி இருக்கிறார் அவருக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வரும் ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் ரிஷபுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக ரிஷப் பண்ட் பயன்படுத்திக் கொண்டார்.

ரிஷப் பண்ட் முன்பு போல் தற்போது கிடையாது ; உண்மையை போட்டு உடைத்த மைக் ஹெசன் 2

சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள் அடித்தது மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு காபாவில் 89 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார்

மேலும் பேசிய அவர் நிச்சயமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 6வது இடத்தில் அவர் களமிறங்கிய விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக அவரது அதிரடியை நியூஸிலாந்து அணிக்கு எதிராக காட்டுவார் என்று நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் இவ்வளவு சிறப்பாக விளையாடுவார் என்று முதலில் யாரும் நம்பவில்லை

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் ரிஷப் பண்ட் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடிய பொழுது நிறைய மக்கள் அவர் எதற்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு அவருக்கு நிதானம் பத்தாது என்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் சொதப்புவார் என்றும் நினைத்தனர்.

ரிஷப் பண்ட் முன்பு போல் தற்போது கிடையாது ; உண்மையை போட்டு உடைத்த மைக் ஹெசன் 3

ஆனால் தற்பொழுது அவற்றையெல்லாம் அவர் மாற்றிக் அமைத்துள்ளார். அவர்களது வாயில் மூலமாகவே ரிஷப் பண்ட் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இவை அனைத்தும் அவரது கடின முயற்சியின் மூலம் கிடைத்தது. நிச்சயமாக வருங்காலத்தில் இந்திய அணிக்கு தொடர்ந்து நிறைய போட்டிகள் தன்னுடைய பங்களிப்பை வழங்குவார்.

தற்பொழுது உள்ள இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றும் அவர்தான். எப்பொழுதும் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று எம்எஸ்கே பிரசாத் இறுதியாக கூறி முடித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *