டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 6-ஆவது இடம்பிடித்த ரிஷப் பண்ட், இதற்கு முன் எந்த இந்திய வீரர்களும் இந்த சாதனையை செய்தது இல்லை
ஐசிசி தற்பொழுது டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை அப்டேட் செய்துள்ளது. அதில் ரிஷப் பண்ட் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அனைத்து இந்திய ரசிகர்களும் ரிஷப் பண்ட்டை தற்போது வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேன் இதுவரை ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப் 10 இடத்திற்குள் முன்னேறியது இல்லை.
ஆனால் வரலாற்றை மாற்றி காட்டும் விதமாக ரிஷப் பண்ட் தற்பொழுது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது அனைத்து இந்திய ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அவரை அணைத்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடர்களில் அசத்தி வரும் ரிஷப் பண்ட்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தொடங்கி தற்போது சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரை மிக அற்புதமாக ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இவர் அடுத்த அரை சதங்கள் இந்தியாவின் வெற்றியை நிர்ணயிப்பது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இந்திய அணி பெற்றதற்கு ரிஷபம் ஒரு முக்கிய காரணம். சிட்னி மற்றும் காபா ஆகிய இரண்டு டெஸ்ட் தொடர்களில் இவர் அடித்த ரன்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது என்றே கூறலாம்.

அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியிலேயே இவர் அடித்த அரை சதம், இரண்டாவது போட்டியில் இவர் அடித்த அரைசதம், குறிப்பாக நான்காவது போட்டியில் கடைசி இன்னிங்சில் இவர் அடித்த சதம் இந்திய அணியின் வெற்றியை மறுபடியும் உறுதிப்படுத்தியது. கடந்த சில மாதங்களாகவே இவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியதன் பரிசாக இவருக்கு இந்த மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஒருநாள் மற்றும் ஐபிஎல் தொடரிலும் அசத்தி வரும் ரிஷப் பண்ட்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான நடந்த ஒருநாள் போட்டியில் சிரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக களமிறங்கி இரண்டு போட்டியிலும் இரண்டு அரை சதங்கள் அடித்து ஒருநாள் போட்டியிலும் இவர் அசத்தியது இந்திய அணி நிர்வாகத்தை மட்டுமல்லாமல் அனைத்து இந்திய ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியில் தற்போது கேப்டனாக களமிறங்கி, மிக அற்புதமாக விளையாடுவது ஓடு மட்டுமல்லாமல் அணையை சரியாக வழிநடத்தி டெல்லி அணியை புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு அவர் நேற்று தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதையும் நிரூபித்துள்ளார்.

ஒரு சமயத்தில் இவரை அனைவரும் கிண்டலடித்து இந்திய அணியில் இருப்பதற்கு இவர் தகுதி இல்லாதவர் என்று கூறியவர்களின் வாயாலேயே தற்பொழுது இவரை புகழ்பாட வைத்துள்ளது இவரின் வளர்ச்சியை குறிக்கிறது. ஐபிஎல் தொடர் தற்பொழுது நிறுத்தி மைக்ரோ பட்டுள்ள வேலையில், இவர் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக கோப்பை இறுதி போட்டியில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியிலும் இவர் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்துவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர்.