வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா. இதனைத்தான் அவுட் இல்லை என தற்போது ஆதாரத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் 34 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் மோதின இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது இந்திய அணி சார்பில் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றிய ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல துவக்கம் அமைத்துத் தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேமர் ரோச் வீசிய பந்தில் சாய் ஹோப் வசம் பிடிபட்டு வெளியேறினார்.
ரோஹித் சர்மாவின் இந்த விக்கெட்டிற்கு களத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுக்க வில்லை. பலமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அப்பீல் செய்த போதும் கள நடுவர் கொடுக்க மறுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் மூன்றாவது நடுவரின் பரிசீலனைக்கு கொண்டு சென்றார்.
பரிசீலனையில் பந்திற்க்கும் பேட்டிற்கும் சிறிய இடைவெளி இருப்பது தெரிந்தது. அதேநேரம் ஈசிஜியில் சிறு அதிர்வலைகளும் காட்டியது. இப்படி இக்கட்டான சூழ்நிலைகளில் எப்போதும் கள நடுவரின் முடிவை சார்ந்தே மூன்றாவது நடுவரின் முடிவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சிக்கலான சூழ்நிலைகளில் பேட்டிங் செய்பவருக்கு சாதகமாகவே முடிவுகளும் வழங்கப்படும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு முடிவு அவுட் இல்லை என வரும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அனைவரும் அதிர்ச்சி தரும் விதமாக அவுட் என மூன்றாவது நடுவரால் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகித் சர்மா சிறிது நேரம் மைதானத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே நின்றார். பின்னர் மறுமுனையில் இருந்த கேஎல் ராகுல் கொடுத்த ஆறுதலுக்கு பிறகு வெளியேறினார்.
ரோகித் சர்மாவின் சர்ச்சையான அவுட் குறித்து சமூக வலைதளங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. இப்படி ஒரு மோசமான முடிவிற்கு 3ம் நடுவர் கடும் விமர்சனத்தையும் சந்தித்தார். இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த முடிவு குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
களத்தில் இருந்து வெளியேறாமல் சிறிது நேரம் நின்றது மற்றும் நடுவரின் முடிவு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தது என இரண்டிற்கும் சேர்த்து ரோஹித் சர்மாவிற்கு ஓரிரு போட்டிகள் தடை அல்லது அபராதம் அல்லது இடைக்கால நீக்கம் இவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்படலாம் என்றும் தெரிகிறது.
?♂️? pic.twitter.com/0RH6VeU6YB
— Rohit Sharma (@ImRo45) June 28, 2019