ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம் அணிக்கு இனியும் தேவையா? - ரோகித் சர்மா கருத்து 1

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் ரோஹித் சர்மா.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

முதல் போட்டி வருகிற மார்ச் 12ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்காக வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த டி20 தொடரில் இசான் கிசான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முதல் முறையாக இடம் பெற்றிருக்கின்றனர். அதேபோல் அக்சர் பட்டேல், ரிஷப் பண்ட் போன்றோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றிருக்கின்றனர். 

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் டி20 போட்டிகளில் இடம்பெற்றிருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. ஆல்ரவுண்டர் அந்தஸ்தை பெற்றிருக்கும் ஹார்திக் பாண்டியா தற்போது பந்துவீச்சு தற்காலிகமாக கைவிட்டு முடிந்த அளவிற்கு பேட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். 

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய போது முழுவதுமாக பேட்ஸ்மேன் பொறுப்பில் களமிறங்கினார். ஒரு போட்டியிலும் அவர் பந்து வீசவில்லை. 2019 ஆம் ஆண்டு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதன்பிறகு பேட்டிங்கில் அவரது பங்களிப்பு இருமடங்காக அதிகரித்து இருப்பதையும் காண முடிகிறது. இருப்பினும் பந்துவீச்சு இருந்தால் இந்திய அணிக்கு கூடுதல் பங்களிப்பாக இருக்கும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. 

ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம் அணிக்கு இனியும் தேவையா? - ரோகித் சர்மா கருத்து 2

இதற்கு பதிலளிக்கும் விதமாக ரோகித்சர்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹர்திக் பாண்டியா செயல்பாடு குறித்து பேசியிருக்கிறார். “பாண்டியா பிளேயிங் லெவனில் முக்கிய பங்கு வகிக்கிறார். தற்போது பந்துவீச்சில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு தொடர்ந்து தனது பந்து வீச்சில் கவனம் செலுத்திவரும் பாண்டியா இனிவரும் டி20 போட்டிகளில் பந்துவீச தயாராக இருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன். 

ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம் அணிக்கு இனியும் தேவையா? - ரோகித் சர்மா கருத்து 3

முழு உடல் தகுதியுடன் அவர் செயல்பட்டு வருகிறார். இந்திய அணி எதிர்பார்க்கும் அளவிற்கு எந்த விதத்திலும் அவரது செயல்பாடு குறையாது என நான் எண்ணுகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் ரிஷப் பண்ட் மீண்டும் அணியில் இடம் பெற்றது குறித்து அவர் தனது கருத்தினை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *