ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராப்பி 2017: ரோகித் மற்றும் ஜாதவ் புறப்படுவதற்கு தாமதம்

அடுத்த மாதம் இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடங்கவுள்ளது. இதற்கான, இந்திய அணி 24-ஆம் தேதி மாலை இங்கிலாந்திற்கு புறப்பட்டது. ஆனால், ரோகித் சர்மா மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் தனி தனி காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு இன்னும் புறப்பட வில்லை. இருவரும் இந்தியாவிலேயே உள்ளனர்.

தன்னுடைய உறவினரின் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக ரோகித் சர்மா இன்னும் புறப்படவில்லை. இந்த ஐபில்-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை வாங்கி தந்த ரோகித் சர்மா, பிசிசிஐ-யிடம் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக இரு நாட்கள் விடுமுறை கேட்டார், இதனால் பிசிசிஐ-உம் ஒப்பு கொண்டது.

விசா நேரத்திற்கு வரவில்லை என்ற காரணத்தினால் கேதார் ஜாதவ் புறப்பட தாமதம் ஆகி விட்டது. இதனால், மே 26 (வெள்ளிக்கிழமை) அன்று புறப்படுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

இரண்டு வீரர்களும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவார்கள். இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பியின் முதல் போட்டியில் ஜூன் 4-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. அதற்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. முதல் போட்டி மே 28-ஆம் தேதி நியூஸிலாந்து அணியுடனும், இரண்டாம் போட்டி மே 30-ஆம் போட்டி வங்கதேச அணியுடனும் விளையாடுகிறது.

“பல நாள் கழித்து ரோகித் சர்மா கோரிக்கையிட்டார், இதனால் தான் நாங்கள் ஒப்பு கொண்டோம்,” என பிசிசிஐ கூறியது.

“ஜாதவின் விசா இப்பொழுது வந்துவிட்டது. நாங்க காத்திருந்தோம், ஆனால் புதன்கிழமை வரை வரவில்லை. இரண்டு வீரர்களும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவார்கள்,” என பிசிசிஐ மேலும் கூறியது.

இந்தியாவை விட்டு செல்வதற்கு முன் இந்திய வீரர்களுக்கு சில அறிவுரைகளை கூறினார் விராட் கோலி.

“நாம் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினோம். இதே போல், ஒரு நாள் போட்டிகளும் விளையாடவேண்டும்,” என்று கோலி கூறினார்.

மேலும் “இந்த தொடரில் முதல் பந்தில் இருந்தே சிறப்பாக விளையாட வேண்டும். ஒரு போட்டி தோற்றால் கூட, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு குறைந்து விடும்,” என கூறினார்.

இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டி ஜூன் 1-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோத உள்ளன.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.