உடனடியாக நிறுத்துங்கள் இல்லையென்றால் பெரிய பிரச்சனையாக மாறிடும்; இந்திய அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை !! 1

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு வீரருக்கும் நடைபெறும் இந்த மோதல் போக்கை உடனடியாக பிசிசிஐ தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.



இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 26ம் தேதி துவங்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதால் இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

உடனடியாக நிறுத்துங்கள் இல்லையென்றால் பெரிய பிரச்சனையாக மாறிடும்; இந்திய அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை !! 2

இந்த நிலையில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெள்ளை பந்து தொடரின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித்சர்மா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவலும் அதேபோன்று ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகியது. இதற்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடையே நடைபெறும் மோதல் தான் என்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

எங்களுக்கு மத்தியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று விராட் கோலியும் ரோகித் சர்மாவும் தெரிவித்திருந்தாலும் முகமது அசாருதீன் போன்ற முன்னாள் வீரர்கள் இருவர் மத்தியிலும் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அசாருதீன் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த முன்னாள் வீரர் இப்படி தெரிவித்திருந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

உடனடியாக நிறுத்துங்கள் இல்லையென்றால் பெரிய பிரச்சனையாக மாறிடும்; இந்திய அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை !! 3

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் இந்திய அணியில் நடைபெறும் இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.

அதில் விராட் கோலியின் தலைமையின் கீழ் ரோஹித் சர்மாவும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலியும் விளையாடுவதற்கு சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் அது அவர்களுடைய கிரிக்கெட் கரியர்க்குதுதான் மிகப் பெரும் பின்னடைவாகும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் கபில்தேவ் போன்ற பல ஜாம்பவான்கள் விளையாடி உள்ளார் ஆனால் அவர்களுக்கு பின்னும் இந்திய அணி சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது இதனால் இவர்கள் இல்லையென்றால் இந்திய அணிக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது.

இவர்கள் இரண்டு பேருமே மிகச் சிறந்த வீரர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது ஆனால் இவர்கள் இப்படி செய்வது நல்லது கிடையாது, இவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் ஒத்துப்போகாமல் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரை புறக்கணிப்பது என்பது இந்திய அணிக்கு இந்தத் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தலாம், மேலும் இவர்கள் இருவருக்கு மத்தியில் நடைபெறும் இந்த மோதல் போக்கை பிசிசிஐ தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கீர்த்தி ஆசாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிசிசிஐ உண்மையை சொல்கிறதா..?,விராட்கோலி உண்மையை சொல்கிறாரா..? அல்லது ரோகித் சர்மா உண்மையை சொல்கிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது….

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *