ஆஸ்திரேலியாவை அலறவிடுவதில் புதிய சரித்திரம் படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.
லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
15 ஓவர்களை கடந்து இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். அவசரப்படாமல் நிதானமாகவும் அதேநேரத்தில் ரன்ரேட் குறைந்துவிடாத அளவிற்கும் ஆடிவருகின்றனர். இந்த போட்டியில் 30 ரன்களை கடந்து ஆடிவரும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களுக்கு மேல் அடிக்கும் வீரர் ரோஹித் சர்மா தான். சச்சின் டெண்டுல்கர், ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது வீரராக இந்த மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார். சச்சினுக்கு அடுத்த இரண்டாவது இந்திய வீரர் ரோஹித் சர்மா. ராகுல் டிராவிட், கங்குலி, தோனி, கோலி ஆகியோர் கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களை அடிக்கவில்லை. சர்வதேச அளவில் ஏகப்பட்ட சிறந்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் ரோஹித்துக்கு முன்னதாக சச்சின், விவியன், ஹெய்ன்ஸ் ஆகியோரை தவிர யாருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்களை குவிக்கவில்லை.
ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, முதல் இரட்டை சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் அடித்தார். அதுமட்டுமல்லாமல் 2013ம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து ஆடிய தொடரில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2000+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்;
சச்சின் டெண்டுல்கர் – 3077 ரன்கள்
ஹெய்னஸ் – 2262 ரன்கள்
வி.வி ரிச்சர்ட்ஸ் – 2187 ரன்கள்
ரோஹித் சர்மா – 2003* ரன்கள்
ஒரு அணிக்கு எதிராக மிக குறைந்த இன்னிங்ஸில் 2000+ ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியல்;
ரோஹித் சர்மா vs ஆஸ்திரேலியா – 37 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா – 40 இன்னிங்ஸ்
வி.வி ரிச்சர்ட்ஸ் vs ஆஸ்திரேலியா – 44 இன்னிங்ஸ்
விராட் கோஹ்லி vs இலங்கை – 44 இன்னிங்ஸ்
தோனி vs இலங்கை – 45 இன்னிங்ஸ்.