மிகப்பெரும் உலக சாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா; 71 ஆண்டு கால சாதனை காலி !! 1

மிகப்பெரும் உலக சாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா; 71 ஆண்டு கால சாதனை காலி

71 ஆண்டுகளுக்குப்பின் கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட் மேனின் சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

ராஞ்சியில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்த புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

டெஸ்ட் தொடருக்கு லாயக்கற்றவர், தேறமாட்டார், சிவப்பு நிறப்பந்தில் ஆடுவதற்கு பொறுமை போதாது என்றெல்லாம் ரோஹித் சர்மா விமர்சிக்கப்பட்ட நிலையில், அத்தனை விமர்சனத்துக்கும் இந்த டெஸ்ட் தொடரில் பதில் அளித்துள்ளார்.

மிகப்பெரும் உலக சாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா; 71 ஆண்டு கால சாதனை காலி !! 2

ராஞ்சியில் நடந்துவரும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா முதல்முறையாக இரட்டை சதம் அடித்து 212 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் 3 இரட்டை சதங்கள் அடித்து டெஸ்ட் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 176,127,14,212 ரன்கள் என 529 ரன்கள் சேர்த்து சாதனையாளர் பட்டியலில் இணைந்தார்.

தென் ஆப்பிரக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரோஹித் சர்மா 529 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு வீரேந்திர சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக 544 ரன்கள் சேர்த்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்து வருகிறது. ஒரு டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 500 ரன்களுக்கு மேல் குவிக்கும் 5-வது இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் ச்ரமா என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர், வினு மன்கட், புதி குந்த்ரன், சேவாக் ஆகியோர் 500 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார்கள்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிகமான ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையிலும் ரோஹித் சர்மா இடம் பிடித்துள்ளார். அந்தவரிசையில் விராட் கோலி இலங்கைக்கு எதிராக(2017-18)610 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்தார்போல், சேவாக்(544), கங்குலி(534), ரோஹித் சர்மா (529), லட்சுமண்(503) ஆகியோர் உள்ளார்கள்

மிகப்பெரும் உலக சாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா; 71 ஆண்டு கால சாதனை காலி !! 3

இந்த டெஸ்ட் தொடரில் 3 இந்திய வீரர்கள் இரட்டை சதம் அடித்துள்ளார்கள். ஒரு டெஸ்ட் தொடரில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் இரட்டை சதம் அடிப்பது இதுதான் முதல் முறையாகும். மயங்க் அகர்வால்(215), விராட் கோலி(254), ரோஹித் சர்மா(212)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *