இந்த பையன் டி20 போட்டில டபுள் செஞ்சுரி அடிப்பான் பாருங்க.. - சவால் விடும் முன்னாள் நட்சத்திரம்! 1

இந்த பையன் டி20 போட்டில டபுள் செஞ்சுரி அடிப்பான் பாருங்க.. – முன்னாள் நட்சத்திரம் சவால்!

ஒருநாள் போட்டியில் மட்டுமல்ல டி20 போட்டியிலும் இவர் இரட்டை சதம் அடிக்கக்கூடியவர் என உறுதியாக கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைப்.

இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா கடந்த சில வருடங்களாக அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வருகிறார். ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இவர், துவக்க வீரராக மாற்றப்பட்ட பிறகு ஆட்டத்தின் போக்கையே மாற்றி பல சாதனைகளை தனதாக்கினார்.

இந்த பையன் டி20 போட்டில டபுள் செஞ்சுரி அடிப்பான் பாருங்க.. - சவால் விடும் முன்னாள் நட்சத்திரம்! 2

குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்துள்ள ஒரே வீரர் இவரே. அத்துடன் டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்துள்ளார். தனிநபர் அடித்த அதிகபட்ச இதுவாகும். இன்னும் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ள இவர் சமீபத்தில் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் துவக்க வீரராக மாற்றப்பட்டார்.

இந்நிலையில், ரோகித் சர்மா குறித்து தனது கருத்தினை தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப். இவர் டி20 போட்டியிலும் இரட்டை சதமடிக்க கூடியவர் என கைப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த பையன் டி20 போட்டில டபுள் செஞ்சுரி அடிப்பான் பாருங்க.. - சவால் விடும் முன்னாள் நட்சத்திரம்! 3

கைப் கூறுகையில், “இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டத்தின் போக்கை பார்க்கையில், அவர் டி20 போட்டியிலும் இரட்டை சதம் அடிக்கக்கூடியவர் என நம்புகிறேன். ஏனெனில், ரோகித் சர்மா 50 ஓவர் போட்டிகளில் 100 ரன்களை கடந்தபிறகு, அடுத்த 100 ரன்களுக்கு அவரது ஸ்ட்ரைக் ரேட் 250க்கும் மேல் இருக்கிறது. இவர் களத்தில் இருந்தால் நிச்சயம் அணியின் ஸ்கொர் 400வரை செல்கிறது. இவரால் இதை டி20 போட்டிகளிலும் செய்ய முடியும்.” என்றார்.

கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா விராத் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் இருந்தார். ஒரே ஆண்டில் 7 சதங்களை விளாசினார். அவற்றில் 5 சதங்கள் உலகக்கோப்பையில் அடிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பையன் டி20 போட்டில டபுள் செஞ்சுரி அடிப்பான் பாருங்க.. - சவால் விடும் முன்னாள் நட்சத்திரம்! 4

கொரோனா பரவிவரும் காலத்தில் இந்தியாவிற்கு மிகப் பெரிய அளவில் நிதியுதவி செய்துள்ளார் ரோகித் சர்மா. அதாவது பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 45 லட்சம் அவர் நன்கொடையாக அளித்துள்ளார். அதேபோல, மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் அளித்துள்ளார். அது போக, @FeedingIndia-வுக்கு ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளார். அதை விட முக்கியமாக, தெருவோர நாய்களின் நலனுக்காக ரூ. 5 லட்சம் கொடுத்து இதயத்தில் இடம் பிடித்து விட்டார் ரோகித் சர்மா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *