புதிய சாதனை படைத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 1
புதிய சாதனை படைத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 2

2020 க்காண ஐபிஎல் போட்டித் தொடர் துபாய் அமீரகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சேக் சயத் கிரிக்கெட் ஸ்டேடியம் அபுதாபியில் நடைபெறும் இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது இறுதிப் போட்டியை விளையாடிக் கொண்டிருக்கிறது.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஷ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

புதிய சாதனை படைத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 3

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இழக்கை நோக்கி அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

காயம் காரணமாக சில ஆட்டத்தில் ரோகித் சர்மாவை பங்கெடுக்கவில்லை. இன்று இறுதிச் சுற்றில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா இந்தப் போட்டியுடன் மொத்தம் 200 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

புதிய சாதனை படைத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 4

200 போட்டிகளில் பங்கெடுத்து வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் க்கு எதிரான 37வது போட்டியில் பங்கெடுத்ததன் மூலம் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தனது 200-வது போட்டியில் விளையாடினார். இவர் 2020 ஐபிஎல் போட்டியில் மொத்தம் 204 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *