மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் என்ட்ரி ! இவரது வருகை இவர்கள் இருவருக்கு தான் ஆப்பு !
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது.
அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தோல்வியை கண்ட இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தங்களது வெறித்தனமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனது. அதுமட்டுமின்றி இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயண தொடரிலும் இவரால் பங்கு பெற முடியவில்லை. சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற உடல் தகுதித் தேர்வில் ரோஹித் சர்மா தகுதி பெற்றார். ஆனால் ஆஸ்திரேலியாவில் 15 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியதால் இவரால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது இவரது தனிமை காலத்தை முடித்துவிட்டு இந்திய பயிற்சி போட்டியில் இணைந்துள்ளார்.

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இரு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கிறது. ரோஹித் சர்மா மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் யாருக்கும் பதிலாக ரோஹித் சர்மா இடம் பெறுவார் என்று கேள்வியும் எழுந்துள்ளது ? இதற்கு பலர் மயங்க் அகர்வால் மற்றும் விஹாரி ஆகிய இருவருள் ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ட்னர்ஷிப் இதற்கு முன்னர் சிறப்பாக இருந்துள்ளது. இதனால் டெஸ்ட் வீரரான விஹாரி பதிலாக ரோகித் சர்மா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
